Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால், இத்தனை நன்மைகளா.?| Can We Take Ghee In Empty Stomach

Gowthami Subramani Updated:
வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால், இத்தனை நன்மைகளா.?| Can We Take Ghee In Empty StomachRepresentative Image.

காலையில் எழுந்த உடன் டீ, காபி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை குடிக்க வேண்டும் என்ற ஆசை தான் நம்மில் எழும். ஒரு சிலர் டீ, காபி குடித்தால் தான், அடுத்த வேலையைத் தொடங்குவர். இன்னும் ஒரு சில உடல்நலத்தைக் கவனிக்கும் நபர்கள், காலையில் வெந்நீரோ அல்லது வெந்நீருடன் சிறிது தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்துவர். ஆனால், உங்களுக்குத் தெரியாத ஒன்று என்ன தெரியுமா.? காலையில் தூங்கி எழுந்ததும், அரை ஸ்பூன் நெய்யை உருக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு நல்ல மாற்றங்களை உணரலாம்.

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால், இத்தனை நன்மைகளா.?| Can We Take Ghee In Empty StomachRepresentative Image

நெய்யில் உள்ள சத்துக்கள்

எந்த மருந்தாலும் நமக்குக் கிடைக்காததை எப்படி நெய் தருகிறது என்று தானே யோசிக்கிறீர்கள். ஆம். நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஈ மற்றும் டி அதிக அளவில் இருப்பதே இதற்குக் காரணம் ஆகும். அதே போல, நெய் மிக அதிக அளவிலான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கிறது. இத்துடன், இது வைட்டமின் ஏ நிறைந்தது. அதே சமயம், பிட்யூட்ரிக் அமிலம் நிறைந்த ஒரு உணவுப் பொருள் என்றால், அது நெய் தான்.

ஒரு டீஸ்பூன் நெய்யில் கிட்டத்தட்ட 112 கலோரிகள் உள்ளது. மேலும், மொத்த கொழுப்பின் அளவு -14 கிராம் ஆகும். இன்னும் சில நெய்யில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் அளவைப் பற்றிக் காணலாம்.

புரதம் – 0.04 கிராம்

வைட்டமின் டி – 15 மி.கி

வைட்டமின் கே – 1.2 மி.கி

வைட்டமின் ஏ – 438 IU

கோலின் சத்து – 2.7 மி.கி

ஒமேகா 6 கொழுப்பு அமிலம் – 2.7 மி.கி

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் – 45 மி.கி

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால், இத்தனை நன்மைகளா.?| Can We Take Ghee In Empty StomachRepresentative Image

வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்ன பயன்

இத்தகைய பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களைத் தரும் விதத்தில் அமையக்கூடிய நெய்யை, நாம் தினந்தோறும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு முக்கிய பலன்களைப் பெறலாம். ஆயுர்வேதத்திலும் நெய் முக்கிய பங்காற்றுகிறது. அதாவது, நாள்தோறும் ஒரு ஸ்பூன் அளவாவது நெய் உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. இதனால், செல்கள் புத்துணர்ச்சியடைவதுடன், நாள் முழுவதும் நம்மை உற்சாகமாகச் செயல்பட வைக்கிறது. பல்வேறு ஆயுர்வேத மருந்துகளும், நெய், தேன் ஆகியவற்றோடு தான் சாப்பிட வேண்டும் எனக் கூறப்படுகிறது.

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால், இத்தனை நன்மைகளா.?| Can We Take Ghee In Empty StomachRepresentative Image

புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு

இயற்கையிலேயே, நெய்க்கு புற்றுநோய் செல்களை அழிப்பதற்கான தன்மையைக் கொண்டிருக்கிறது.

தினமும், காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிட்டு வரும் போது, உடலில் உள்ள இரத்த செல்கள் புத்துணர்ச்சி அடைவதுடன், செல்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதாலும், புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால், இத்தனை நன்மைகளா.?| Can We Take Ghee In Empty StomachRepresentative Image

செரிமானப் பிரச்சனை

வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் உள்லிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு நெய் உதவுகிறது. காலையில் பாலில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு குறைவதோடு குடல் புண்களை ஆற்றக்கூடிய சக்தி கொண்டுள்ளது. இது செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, அஜீரணக் கோளாறை நீக்க உதவுகிறது.

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால், இத்தனை நன்மைகளா.?| Can We Take Ghee In Empty StomachRepresentative Image

மூக்கடைப்பிற்கான தீர்வு

பொதுவாக குளிர் காலத்தில் காலையில் தூங்கி எழுந்ததும் பெரும்பாலானோர்க்கு தொண்டை கட்டிப்போவதுடன், மூக்கடைப்பும் ஏற்படும். இதனை நாளடைவில் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், சைனஸாக மாறிவிடும்.

இந்த பிரச்சனை உள்ளவர்கள், காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய்யை உருக்கி சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்தால் தொண்டைக்கட்டிப் போதல் குணமாகி விடும். மேலும், ஓரிரு துளி நெய்யை லேசான தீயில் சூடு செய்து, மூக்கு துவாரங்களில் வைக்கும் போது சைனஸ் பிரச்சனையும், மூக்கடைப்பும் சரியாகி விடும்.

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால், இத்தனை நன்மைகளா.?| Can We Take Ghee In Empty StomachRepresentative Image

மூட்டு வலி குணமாக

வயது ஏற ஏற, எலும்புகள் தேய்மானம் அடைவதுடன், அதன் மஜ்ஜைகளில் ஈரத்தன்மை குறைய ஆரம்பித்து விடும். இதனால், 40 வயது மேற்பட்டோர்களுக்கு மூட்டுவலி மிகுந்த தொந்தரவை ஏற்படுத்தும். தற்போதெல்லாம், இளம் வயதினருக்கே மூட்டு வலி ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆனால், காலையில் எழுந்தபின் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூட்டு வலி, ஆஸ்டியோபோராசிஸ் போன்ற எலும்புகள் சம்பந்தபட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால், இத்தனை நன்மைகளா.?| Can We Take Ghee In Empty StomachRepresentative Image

ஞாபகத் திறன் அதிகரிப்பதற்கு

வல்லாரையைப் போலவே, நெய்யும் மூளையின் செயல்பாட்டைத் தூன்டி சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. காலை எழுந்த உடன், அரை ஸ்பூன் சுத்தமான பசு நெய்யை குழந்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம், அவர்களின் ஞாபகத் திறன் மேம்பட்டிருப்பதை உணரலாம்.

மேலும், இது மூளையில் உள்ள செல்களைத் தூண்டி, நரம்புகளைச் செயல்பட வைக்க உதவுகிறது. சிறுவயதிலேயே, நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட பழகுவதன் மூலம், அல்சைமர், டிமென்ஷியா போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால், இத்தனை நன்மைகளா.?| Can We Take Ghee In Empty StomachRepresentative Image

தலைமுடிக்கு நெய் உபயோகிப்பதால்

சருமப் பொலிவிற்கு மட்டுமல்ல முடி வளர்ச்சியிலும் நெய் முக்கிய பங்காற்றுகிறது. அதன் படி, தலைமுடி மற்றும் நகங்கள் புரதங்களால் ஆனது. எனவே, அதிக ஊட்டச்சத்துக்களும் புரத உணவுகளில் இருந்து தான் கிடைக்கிறது. இதனால், முடி உதிர்தலுக்கு புரத உணவே சிறந்தது.

அதன் படி, காலையில் வெறும் வயிற்ரில் நெய் சாப்பிடுவதையும், வாரத்தில் ஒரு முறை நெய் தேய்த்து ஊறவிட்டு குளித்து வருவதையும் வழக்கமாகக் கொண்டால், தலைமுடி உதிர்வு நின்று, நன்கு அடர்த்தியாக முடி வளர்ச்சி அடையும்.

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால், இத்தனை நன்மைகளா.?| Can We Take Ghee In Empty StomachRepresentative Image

சருமப் பளபளப்பிற்கு நெய்

அதிக வறட்சியான சருமம் கொண்ட நபர்கள், நெய்யை தங்களுடைய உணவில் எடுத்துக் கொள்வது சிறந்தது. குறிப்பாக, காலையில் வெறும் வயிற்றில் நெய்யை அரை ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால், சருமத்தில் இறந்த செல்களை நீக்கி, செல்களைப் புதுப்பிக்கும். இதன் மூலம், சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

எனவே, இது போன்ற எண்ணற்ற பயன்களைத் தருவதால், காலையில் வெறும் வயிற்றில் நெய் பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெற்று மகிழுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்