Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ஏகாதசி விரதத்திற்குப் பின் உட்கொள்ள வேண்டிய ஏகாதசி சாம்பார்! | Vaikunta Ekadasi Recipes

Gowthami Subramani Updated:
ஏகாதசி விரதத்திற்குப் பின் உட்கொள்ள வேண்டிய ஏகாதசி சாம்பார்! | Vaikunta Ekadasi RecipesRepresentative Image.

வைகுண்ட ஏகாதசி என்றாலே பெருமாளுக்கு உகந்த தினமாகும். இந்த சிறப்பான தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், ஏகாதசி நாளில் உண்ணாமல் உறங்காமல் இருப்பர். அதன் பிறகு வரும் துவாதசி நாளில் பலவகையான காய்கறிகளுடன், கூடிய உணவை சாப்பிட வேண்டும் எனக் கூறுவர். அந்த வகையில், இந்த துவாதசி விருந்தில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்றவையும் உணவில் இடம் பெற வேண்டும்.

இதனால், 21 வகையான காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது வழக்கமாகும். இந்த காய்கறிகள் அனைத்தையும் பயன்படுத்தி சாம்பார் வைப்பார்கள். இதனை ஏகாதசி சாம்பார் அல்லது ஏகாதசி குழம்பு என அழைப்பர். அனைத்ஹ்டு காய்கறிகளையும் சேர்த்து தயார் செய்யும் இந்த சாம்பாரை தென் மாவட்டங்களில் ஏகாதசி சாம்பார் என்றே அழைப்பர்.

ஏகாதசி விரதத்திற்குப் பின் உட்கொள்ள வேண்டிய ஏகாதசி சாம்பார்! | Vaikunta Ekadasi RecipesRepresentative Image

தேவையான பொருள்கள்

தேவையான பருப்பு & காய்கறிகள்

21 வகை காய்கறி, கிழங்கு, கீரை வகைகள் சேர்த்து – 600 கிராம்

அனைத்து பருப்பு வகைகளையும் சேர்த்து - 300 கிராம் அளவு

சாம்பாருக்கு அரைப்பதற்கு தேவையானவை

தேங்காய் – அரை மூடி

பச்சை மிளகாய் – 2

புளி – பெரிய எலுமிச்சை அளவு

தக்காளி – 2

21 காய்கறிகளுடனும் சேர்ப்பதற்கு தேவையானவை

சின்ன வெங்காயம் – 10

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1

நீளமாக கீறிய பச்சை மிளகாய் – 4

வெள்ளைப் பூண்டு – 3

சாம்பார் பொடி – 5 டீஸ்பூன்

தக்காளி – 3

இஞ்சி – 2 இஞ்ச் அளவு

அரளி நெல்லிக்காய் – 3

பெரிய நெல்லிக்காய் – ½

நார்த்தங்காய் – ¼

தனியா தூள் – 2 டீஸ்பூன்

மாங்காய் – ¼ துண்டு

உப்பு – தேவையான அளவு

தாளிக்கத் தேவையானவை

நல்லெண்ணெய் – தேவையான அளவு

கடுகு – 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 3

பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

தாளித்த பின் சாம்பாரில் சேர்க்க வேண்டியவை

வெல்லம் – ½ டீஸ்பூன்

சர்க்கரை – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

ஏகாதசி விரதத்திற்குப் பின் உட்கொள்ள வேண்டிய ஏகாதசி சாம்பார்! | Vaikunta Ekadasi RecipesRepresentative Image

செய்முறை

✤ முதலில் பருப்பு வகைகளான பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போன்ற அனைத்துப் பருப்புகளையும் முதல் நாள் இரவே, ஊற வைக்க வேண்டும்.

✤ காலையில், இந்தப் பருப்புகளை குக்கரில் நன்றாக குழையும் வரை வேக வைக்க வேண்டும்.

✤ பின்னர், அனைத்து காய்கறி வகைகள், கீரை வகைகள், மற்றும் கிழங்கு வகைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

✤ இத்துடன், அரைத்த விழுது, காய்கறிகளுடன் சேர்க்க வேண்டிய அனைத்தையும் கலந்து குக்கரில் வைத்து, ஒரு விசில் விட்டு இறக்கி விட வேண்டும்.

✤ அதன் பிறகு, இதையும் வேக வைத்த பருப்புகளையும் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு கொதிக்க வரும் போது சர்க்கரை, வெல்லம் போன்றவற்றைச் சேர்க்கவும்.

✤ அதன் பின், தாளிக்க வேண்டியவற்றைச் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் கடைசியாக கொத்தமல்லி இலைகளைத் தூவலாம்.

இப்பொது, ஆரோக்கியமும், சுவையும் மிக்க ஏகாதசி குழம்பு தயார் ஆனது. வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து முடிப்பவர்கள் இதனை உண்ணலாம்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்