Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குளிர் காலத்தில் எடை குறைய இப்படி பண்ணுங்க.. | Winter Exercise For Weight Loss

Gowthami Subramani Updated:
குளிர் காலத்தில் எடை குறைய இப்படி பண்ணுங்க.. | Winter Exercise For Weight LossRepresentative Image.

உடல் எடையைக் குறைப்பதென்பது எளிதான செயல் அல்ல. ஒரு நாள் நீங்கள் உடற்பயிற்சி செய்து, உணவைக் கட்டுப்படுத்தினால் மட்டும் உடல் எடையைக் குறைப்பதென்பது என்பது இயலாத காரியம். நாள்தோறும், அதனை வழக்கமான செயலாக மாற்றி உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அதிலும், குளிர் காலத்தில் எல்லோருக்கும் சாதாரணமாகவே உடல் எடை கூடி விடும்.

குளிர் காலத்தில் எடை குறைய இப்படி பண்ணுங்க.. | Winter Exercise For Weight LossRepresentative Image

குளிர் காலத்தில் எடை கூடுவதற்கான காரணம்

பொதுவாக உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், கோடை காலத்தில் எடுக்கும் முயற்சியை விட குளிர் காலத்தில் குறைவாக எடுப்பர். இதற்கு முக்கியமானதாகக் கூறப்படும் போது நிறைய காரணங்கள் இருக்கலாம். அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

✤ முதலில், குளிர் காலத்தில் அவ்வளவு எளிதாக நம் உடலிலிருந்து வியர்வை வடியாது. இதனால், கெட்ட கொழுப்புகள் நம் உடலிலேயே தங்கி விடுகின்றன.

✤ அடுத்ததாக, குளிர் காலத்தில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்வதை விட நம் உணவில் அதிகமான மசாலாப் பொருள்கள் கலந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்கிறோம். இது போன்ற காரணங்களால் உடல் எடை குறைவதில் பெரிய மாற்றம் ஏற்படாமல், எடை கூடிக்கொண்டே போகும்.

✤ குளிர் காலத்தில் விரைவாக எழுந்து உடற்பயிற்சி செய்வதற்கு அதிகாலையில் எழ முடியாத சூழ்நிலை உருவாகும். இதன் காரணமாக, காலையில் எழ முடியாதவர்கள், உடற்பயிற்சிக்கு வெளியில் செல்வதற்கு கஷ்டப்பட்டு அப்படியே விட்டு விடுகின்றனர்.

குளிர் காலத்தில் எடை குறைய இப்படி பண்ணுங்க.. | Winter Exercise For Weight LossRepresentative Image

குளிர் காலத்தில் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

குளிர் காலத்தில் எக்ஸர்சைஸ் செய்ய முடியாமல், உடல் எடை கூடுவதை நம்மால் அறிய முடிகிறது. இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் நாம் காணலாம்.

✤ மேலே கூறப்பட்ட காரணங்களில் முக்கியமான ஒன்று உணவில் மசாலாப் பொருள்கள் சேர்த்துக் கொள்வது. எனவே, உணவில் மசாலா பொருள்கள் சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இவ்வாறு, உணவுக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து பின் பற்றுவதுடன், குளிர்காலத்தில் எடை குறைவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

✤ வீட்டிலேயே உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், பல்வேறு வகையான நன்மைகளைப் பெறலாம். தொடர்ச்சியாக வீட்டிலேயே சிறிய சிறிய உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலமும் நம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

✤ வெது வெதுப்பான நீரை அருந்துவது என்பதும் முக்கியமான ஒன்று. குளிர்காலத்தில் நாம் உடல் பெரும்பாலும் நீர் அருந்துவதையே மறந்து விடுவோம். அதாவது தண்ணீரை உடல் ஏற்றுக் கொள்ளாது எனக் கூற முடியாது. உடலுக்கு எப்போதும் போலவே நீர் தேவைப்படும். ஆனால், குளிர் காலத்தில் நாம் நீர் அருந்துவது என்பதைக் கடினமாக கருதுகிறோம்.

✤ குளிர் காலத்தில் நமது உடல் மிகவும் குளிர்ச்சியாகவே இருப்பதால், உடலை வெப்பப்படுத்துதலும் அவசியமாகிறது. எனவே, சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவிடுவது என்பது நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியதாக அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்