Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள்..!|Coronavirus BF.7

Gowthami Subramani Updated:
அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள்..!|Coronavirus BF.7Representative Image.

தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மக்களை அச்சுறுத்தும் கொரோனாவின் தாக்கம் இன்றும் ஒழிந்தபாடில்லை. மீண்டும் மீண்டும் உருமாறி, புதிய வேரியன்ட் ஆக மாறி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள், மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பும் நேரமான இந்த நேரத்தில், மீண்டும் ஒமிக்ரான் பிஎஃப் 7 எனும் தொற்று நோய் தற்போது தீவிரமாகப் பரவி வருகிறது. தற்போது, சீனாவில் பரவி வரும் இந்த நோயானது, இந்தியாவிலும் அதிகம் பரவ வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள்..!|Coronavirus BF.7Representative Image

மக்கள் புறக்கணிப்பு

கொரோனாவின் வேரியன்ட் மாற மாற, அதன் அறிகுறிகளும் மாறிக்கொண்டே வருகின்றன. இதில், பல்வேறு அறிகுறிகளை மக்கள் சாதாரணமாகக் கருதி, அதனைப் புறக்கணித்து விடுகிறார்கள். ஆனால் அவை கோவிட் நோயாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கலாம். எனவே, உடல் நிலையில் சிறியதாக மாற்றம் ஏற்றப்பட்டாலும், புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் ஆகும்.

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள்..!|Coronavirus BF.7Representative Image

ஒமிக்ரான் BF.7 அறிகுறிகள்

இந்தப் புதிய வகை கொரோனா வேரியன்ட் ஆன, ஒமிக்ரான் BF.7-ன் சில அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இந்த்ப பதிவில் காண்போம்.

✤ மூச்சு திணறல் ஏற்படுதல்

✤ அதிக காய்ச்சல் மற்றும் களைப்பு

✤ தசை வலி

✤ வாசனைகளை உணர முடியாத நிலை உண்டாகுதல்

✤ நடுக்கம் மற்றும் காய்ச்சல்

✤ பசியின்மை

✤ வயிற்றுப் போக்கு

✤ தொடர் இருமல்

✤ சளியுடன் கூடிய இருமல்

✤ சளி இல்லாத இருமல்

✤ தும்மல்

✤ தொண்டை வலி

✤ மூக்கடைப்பு

இதில் சுவாசுப்பதில் சிரமம் ஏற்படுதல் மற்றும் வாசனை இழப்பு போன்றவை கோவிட் BF-7 மாறுபாட்டின் பொதுவான அறிகுறிகளாகக் கூறப்படுகிறது. இதில் குறிப்பிட்ட மற்ற வகைகளும் பொதுவான அறிகுறிகளாகும்.

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள்..!|Coronavirus BF.7Representative Image

அறிகுறிகள் தோன்றினால் செய்ய வேண்டியவை

தொற்று பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து, ஐந்து நாள்கள் வரை மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்கலாம். ஆனால், இன்னும் சில பேருக்கு 10 நாள்களுக்குப் பிறகும் தொற்றுநோயைப் பரப்பலாம். இந்த அறிகுறிகளை உணர்ந்தவர்கள், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக கொண்டிருப்பவர்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது.

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள்..!|Coronavirus BF.7Representative Image

தடுக்கும் முறைகள்

BF.7 ஒமிக்ரான் வகை தொற்று நோயானது, BA.5-ன் துணை வகையாகக் கூறப்படுகிறது. இது அதிக அளவில் பரவக்கூடியதாகும். தனிமையில் இருப்பவர்கள் மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும், இது தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் வலுவான திறனைக் கொண்டுள்ளது. எனவே, ஒமிக்ரான் BF.7 நோய்த் தொற்று பரவாமல் முடிந்த வரை தவிர்த்துக் கொள்வது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்