Fri ,Nov 08, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

மகப்பேறும் மறுபிறப்பும் 8: கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்… இல்லைனா பின்விளைவுகள் மோசமாக வாய்ப்புண்டு..!!

Nandhinipriya Ganeshan May 23, 2022 & 19:05 [IST]
மகப்பேறும் மறுபிறப்பும் 8: கர்ப்பத்தின் முதல் மூன்று மாதத்தில் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்… இல்லைனா பின்விளைவுகள் மோசமாக வாய்ப்புண்டு..!!Representative Image.

First Trimester Pregnancy Food: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.

First Trimester Precautions: கர்ப்ப காலத்தில் பெண்கள் முதல் மூன்று மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இந்த காலத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. எனவே, கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்களில் எடுத்தும் கொள்ளும் உணவுகளிலும், மற்ற செயல்களிலும் கவனத்துடன் இருக்க வேண்டிய ரொம்ப (First Trimester Precautions) முக்கியமான ஒன்று. அதுமட்டுமல்லாமல், பெண்கள் இந்த மாதிரியான நேரத்தில் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடால் தான் கருவில் வளரும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறக்கும்.

பொதுவாக கருவுற்ற நாளில் இருந்து வாந்தி, குமட்டல் என ஒவ்வாமையை எதிரிகொள்வதால் பெரும்பாலான பெண்கள் உணவை தவிர்த்து விடுவார்கள். ஆனால், அது மிகவும் தவறான ஒரு விஷயம். எனவே, வயிற்றில் வளரும் குழந்தையின் உறுப்புகள் இக்காலத்தில் தான் வளரத்தொடங்கும். எனவே, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது குழந்தை ஆரோக்கியத்திற்கும் மூளை வளர்ச்சிக்கும் உதவும். ஒருவேளை ஒவ்வாமை உணர்வு அதிகமாக இருந்தால் அந்த உணர்வை கட்டுப்படுத்தும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளை சாப்பிடலாம் (first trimester pregnancy food chart), எதை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம். 

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்:

கார்போஹைட்ரேட்டுகள்  - அரிசி, சப்பாத்தி ஆகியவற்றில் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள். ஏனெனில், இதில் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் உடலுக்கு ரொம்ப நல்லது.

பாதாம் - கரு வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் சத்து கிடைக்கிறது. ஏனெனில், இதில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது.

சிக்கன் - இந்த முதல் மூன்று மாதத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். சிக்கனில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

ப்ராக்கோலி - ப்ராக்கோலியில் சாதாரணமாகவே நிறைய நன்மைகள் இருக்கின்றன. கர்ப்பிணி பெண்கள் இதை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். 

எள் உருண்டை - இதில் கால்சியம், இரும்புத்து ஏராளம், எனவே ஆறாவது மாதத்தில் இருந்து  (foods to eat when pregnant first trimester) சாப்பிடலாம்.

வெண்டைக்காய் - வெண்டைக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீரிழிவு பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம். 

ஆரஞ்சு - பொதுவாக சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை போதுமான அளவு சேர்த்துக் கொள்ளலாம். 

அத்திப்பழம் - வெல்லம், பேரீட்சை, அத்திப்பழம் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகின்றன. குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இதை ஆறாவது மாதத்தில் இருந்து போதுமான அளவு எடுத்துக் கொள்ளலாம். 

தயிர் - தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. பொதுவாக, சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக்காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படும். அந்த எரிச்சலை தணிக்க தயிரை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. 

முட்டை - முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் சத்து நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரியும். எனவே, தினமும் 2 முட்டைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இது தாய்க்கு மட்டுமன்றி, குழந்தைக்கும் ரொம்ப நல்லது.

சால்மன் - மற்ற மீன்களை விட சால்மன் என்ற மீனில் அதிகளவு கால்சியம், வைட்டமின் டி மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இதனால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது (first trimester pregnancy food) நல்லது. 

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

பழங்கள் - அன்னாசி பழத்தை கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதத்தில் சாப்பிடக் கூடாது. ஏனெனில், இவை கர்ப்பப்பை வாய் தளர்த்த வாய்ப்புகள் உண்டு. அதாவது, கருச்சிதைவு. 

பதப்படுத்தப்படாத பால் - பால் குடிக்கலாம், ஆனால் காய்ச்சாத பால், பதப்படுத்தப்படாத பால் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். 

பானங்கள் - பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பானங்களில் ரசாயனங்கள், செயற்கை வண்ணங்கள் சேர்த்திருப்பதால் அவற்றை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக வீட்டிலேயே பழங்களை ஜூஸ் போட்டு குடிக்கலாம். 

முளைக்கட்டிய தானியங்கள் - இதில் சத்து நிறைந்த உணவுகளில் ஒன்று தான். ஆனால், கர்ப்பிணிகள் பச்சையாக சாப்பிடக்கூடாது. ஏனெனில், இது கருவில் வளரும் குழந்தைக்கு மிகவும் தீங்கு விளைக்கும். எனவே, சமைத்து சாப்பிடலாம். 

மசாலா பொருட்கள் - கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் மசாலா பொருட்கள் என்று சொல்லப்படும் மல்லி விதைகள், பெருஞ்சீரகம் போன்றவற்றை அதிகம் சேர்க்க கூடாது. ஏனெனில், கருக்கலைப்பை ஊக்குவிக்க வாய்ப்புண்டு. 

காஃபைன் பானங்கள் - காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் முதல் மூன்று மாதங்களில் தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில், காபில் இருக்கும் காஃபைன் என்ற பொருள் நெஞ்செரிச்சலை அதிகரிப்பதோடு, கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். அதேப்போல் சாக்லேட், டீ, பானங்கள் ஆகியவற்றை தவிர்க்கவும். 

வெந்தயம் - கர்ப்பக்காலத்தில் அதிக வெந்தயம் சேர்த்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில், இது குறைபிரசவத்தை உண்டாக்கவும் வாய்ப்புண்டு. அதிமதுரத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

இதோடு, அதிக எண்ணெய் பண்டங்கள், அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவு, கொழுப்பு நிறைந்த உணவுகள் என எல்லாவற்றையும் விட்டு சற்று தூரம் இருப்பது நல்லது, அதாவது (pregnancy first trimester precautions) தவிர்க்க வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்