Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

மகப்பேறும் மறுபிறப்பும் 7: முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் இந்த விஷயங்களை மட்டும் தெரியாம கூட செஞ்சிடாதீங்க...!!

Nandhinipriya Ganeshan May 16, 2022 & 16:30 [IST]
மகப்பேறும் மறுபிறப்பும் 7: முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் இந்த விஷயங்களை மட்டும் தெரியாம கூட செஞ்சிடாதீங்க...!!Representative Image.

First Trimester Precautions: கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான தருணமாகும். கர்ப்பக்காலத்தில் கர்ப்பிணி பெண்களின் அதிகபட்ச ஆசையே குழந்தையை ஆரோக்கிமாக பெற்றெடுக்க வேண்டும் என்பது தான். அதற்காகதான் முதல் மாதத்திலிருந்து 9 மாதங்கள் வரை பார்த்து பார்த்து பக்குவமாக ஒவ்வொருன்றையும் செய்வார்கள். உதராணமாக, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதில் இருந்து, இரவு தூங்குவது வரை.

மகப்பேறும் மறுபிறப்பும் 6: ப்ரக்னன்சி டெஸ்ட் எடுப்பதற்கு சிறந்த நேரம் இதுதான்...எல்லா பெண்களும் தெரிஞ்சுக்கணும்...!

அந்த வகையில், பெண் கருவுற்றதை உறுதி செய்த நாள் தொடங்கி 12 வாரங்கள் வரை மற்ற சில விஷயங்களிலும் அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். இந்த நாட்களை பாதுகாப்பாக கடந்துவிட்டாலே போதும், ஏனெனில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை இந்த மாதங்களில் குறைவாகவே இருக்கும். இதனால் தான் எதையும் பார்த்து ஜாக்கிரதையாக செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். கர்ப்பிணி பெண்கள் உடல் அளவிலும் மனதளவிலும் வித்தியாசமான மாற்றத்தை சந்திக்கும் இந்த காலத்தில் தவிர்க்க வேண்டிய (Pregnancy first trimester precautions) மிக முக்கியமான விஷயங்களை பற்றி விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

சத்தான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்:

கருவுற்ற நாளிலிருந்து பெண்கள் ஒவ்வாமையை எதிர்கொள்வதால் பெரும்பாலும் உணவை தவிர்த்து விடுவார்கள். இது பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு உண்டாக்கிவிடும். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உணவு முறையும் அதில் ஒன்றாக கூறலாம். இந்த காரணத்தால் தான் மருத்துவர்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.

வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியமும் மூளை வளர்ச்சியும் சிறப்பாக இருக்க சத்துக்கள் மிக்க உணவுகள் தான் உதவி புரிகிறது. முதல் மூன்று மாத காலங்களில் சிசுவின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதால் அதை மேம்படுத்த உதவி புரியும் கால்சியம் மற்றும் புரத சத்துக்கள் நிறைந்த உணவை (health tips for pregnant woman) சேர்த்து கொள்வது அவசியம்.

மகப்பேறும் மறுபிறப்பும் 5: இதெல்லாம் தான் குறைப்பிரசவம் ஏற்பட காரணமாம்... ஆரம்ப கால அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிகள் என்னென்ன..?

கடுமையான உடற்பயிற்சி செய்யக்கூடாது:

உடற்பயிற்சி செய்வது நல்லது தான். ஆனால், கர்ப்பகாலத்தில் சில கடுமையான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. ஏனென்றால், கடுமையான உடற்பயிற்களை மேற்கொள்வதால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால், கர்ப்பகாலத்தில் செய்வதற்கென்றே பல உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றை மருத்துவர்களின் ஆலோசனையுடன் மிகவும் லேசான பயிற்சிகளை மட்டும் செய்வது நலம்.

மகப்பேறும் மறுபிறப்பும் 4: தாய்ப்பால் சுரக்க பாட்டி வைத்தியம்..!

உடலுறவு வைத்துக் கொள்ளலாமா?

கர்ப்பக்காலத்தில் இம்மாதிரியான சந்தேகம் அனைவருக்கும் வருவது தான். முதல் முறை கருத்தரிக்கும் போது இது குறித்து ஆலோசனை செய்திருந்தாலும் இரண்டாவது முறை கருத்தரிக்கும் போதும் இந்த சந்தேகம் வரக்கூடும். கருவுற்ற நாளிலிருந்து முதல் மூன்று மாதங்களில் கருவின் உறுதித்தன்மை குறைவு என்பதால் கண்டிப்பாக உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும்.

முதல் ட்ரைமெஸ்டர் காலங்களில் முடிந்ததும் உறவு கொள்ளலாம், எந்த தவறும் இல்லை. அதாவது 4வது மாதம் முதல் 9வது மாதம் வரை உறவு கொள்ளலாம். எனினும் பெண்களுக்கு இயல்பாகவே கருத்தரிப்பு காலங்களில் உடலுறவின் மீது அவ்வளவாக ஈடுபாடு இருக்காது. அப்படியே உடலுறவு கொண்டாலும் ஆண்கள் அவர்களின் மீது முழு ஆசைகளையும் திணிக்க கூடாது. அதாவது, துணையின் உடல் எக்காரணம் கொண்டும் கர்ப்பிணியின் உடலை அழுத்த கூடாத வகையில் இருக்க வேண்டும்.

மகப்பேறும் மறுபிறப்பும் 3: விரைவில் கருத்தரிக்கணுமா? திருமணமான பெண்கள் ஒரு மாதம் தொடர்ந்து இந்த உணவுகளை சாப்பிடுங்க!

இதை கண்டிப்பா தவிர்க்க வேண்டும்:

பல பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், கர்ப்பகாலத்தில் புகைப்பிடித்தால் கருச்சிதைவு, பிறப்பு குறைபாடுகள், குறைந்த எடையுடன் பிறப்பு, முன்கூட்டிய பிறப்பு மற்றும் குழந்தை இறப்பு கூட ஏற்படலாம். எனவே, இது இரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் புகைப்பழக்கத்தை விட்டு ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுப்பதற்கான வழியை பாருங்கள். அதேபோல், முதல் மூன்று மாதங்களில் ஆல்கஹால் அருந்துவதும் அனைத்து நிலைகளிலும் குழந்தையின் வளர்ச்சி பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

இம்மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும்:

மூன்று மாதத்தில் அதிகப்படியான குமட்டல், வாந்தி இருக்கும், இந்த உணர்வை போக்க குளிர்ச்சியான பானங்கள், குளிச்சியான தண்ணீர், குளிர்ச்சியான உணவுகள் போன்றவற்றை எடுத்துகொள்ள கூடாது. ஆனால், இந்த காலத்தில் வாந்தி, குமட்டல் உணர்வை போக்க பல கார்பனேட்டட் குளிர்பானங்களை குடிக்கிறார்கள். இது அப்போதைக்கு நாக்குக்கு சுவையூட்டினாலும் கருச்சிதைவை ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தானது. அதற்கு பதிலாக வீட்டிலேயே பழங்களை (tips for first trimester of pregnancy) வாங்கி அதை ஜூஸ் போட்டு குளிச்சியாக்காமல் குடிக்கலாம்.

ஒரு சிலருக்கு காபி, டீ, உணவையும் கூட சூடாக சாப்பிடும் பழக்கும் உண்டு. கர்ப்பக்காலத்தில் உணவின் சுவையை காட்டிலும் வயிற்றுக்கு உள்ளே குமட்டலில்லாமல் கருவை அடைய வேண்டுமே என்று சூடாக உணவை எடுத்து கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், முதல் மூன்று மாதத்தில் வாந்தி, குமட்டல், சுவையறியாத தன்மை என்பது எல்லாமே பொதுவாக இருக்க கூடிய பிரச்சனைகளே. இதை சூடாக சாப்பிடுவதன் மூலம் தவிர்க்க முடியாது. அதே நேரம் வெதுவெதுப்பான இளஞ்சூடான நீர் குடிப்பதன் மூலம் மசக்கையை கட்டுப்படுத்த முடியும்.

மகப்பேறும் மறுபிறப்பும் 2: கர்ப்பிணிகள் இந்த பொருட்களை தெரியாமல் கூட சாப்பிட்டுறாதீங்க!

சிறுநீரை அடக்கி வைக்கக் கூடாது:

கர்ப்பக்காலத்தில் தண்ணீர் அதிகமாக குடிப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது இயல்பானது தான். இது நோய்க்கான அறிகுறியோ, உடல் கோளாறோ கிடையாது. ஆனால் தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் அதிகம் போகிறது என்று தண்ணீர் குடிப்பதை குறைப்பதோ, சிறுநீரை அடக்கி வைப்பதோ தவறானது. சிறுநீர் பையில் தங்காமல் வெளியேறும் சிறுநீரை தவிர்க்காமல் வெளியேற்றிவிட (pregnancy care tips in tamil) வேண்டும். இல்லையெனில், சிறுநீர் தொற்று வர அபாயம் ஏற்படும். 

சம்மர் சீசனில் நாப்கீனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி..? இதோ சில டிப்ஸ்….!

தூங்கும் முறையில் கவனம்:

கர்ப்பகால பராமரிப்பில் தூங்கும் முறையும் ஒன்று. இந்த முதல் மூன்று மாதங்களில் அதிகமாக மல்லாந்து படுக்க கூடாது. இதனால், இரத்த குழாய்களில் அழுத்தம் உண்டாக்கி மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். எனவே, கவனத்தோடு இருப்பது அவசியம். அதேப்போல், தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதால் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொறுப்பு துறப்பு: கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும், மருத்துவ டிப்ஸ்களையும் இந்த பகுதியில் காண்போம். எனினும் கர்ப்பக் கால சிக்கல்கள் மற்றும் உடல் உபாதைகளைத் தீர்க்க கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். வீட்டிலேயே பிரசவம், ஆங்கில மருத்துவம் இல்லாத நாட்டு மருத்துவ முறைகளை Search Around Web இணையதளமோ ஆசிரியர்களோ பரிந்துரைப்பதில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்