Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

IPL 2023 : இனி தலைமை பயிற்சியாளர் பிரையன் லாரா.. திடீரென வெளியான அறிவிப்பு.. எந்த அணி தெரியுமா?

Sekar September 03, 2022 & 16:45 [IST]
IPL 2023 : இனி தலைமை பயிற்சியாளர் பிரையன் லாரா.. திடீரென வெளியான அறிவிப்பு.. எந்த அணி தெரியுமா?Representative Image.

IPL 2023 : முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி  ஐபிஎல்லின் அடுத்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) இன் தலைமை பயிற்சியாளராக என சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ட்விட்டரில் அறிவித்தது. மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக கடந்த சீசனில் இருந்த பிரையன் லாரா, அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லாராவின் நியமனத்தை அறிவித்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கிரிக்கட் ஜாம்பவான் பிரையன் லாரா வரவிருக்கும் ஐபிஎல் சீசன்களுக்கு எங்கள் தலைமை பயிற்சியாளராக இருப்பார்." எனத் தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் டாம் மூடிக்கும் நன்றி தெரிவித்தனர்.

மூடி தலைமை பயிற்சியாளராக இருக்கும்போது, அணி 5 பிளேஆஃப்களில் விளையாடியுள்ளது மற்றும் 2016இல் சாம்பியன் பட்டம் வென்றது. 2020 ஆம் ஆண்டு, ட்ரெவர் பெய்லிஸ் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். எனினும் 2021 ஆம் ஆண்டில் டாம் மூடி மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதோடு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கூடுதலாக பிரையன் லாராவை அணியின் வழிகாட்டியாக நியமித்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 2022 ஆம் ஆண்டில் அவர்களால் குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்க முடியவில்லை.

பிரையன் லாரா தற்போது தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 2023 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணி புது உத்வேகத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்