Sun ,May 26, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

Alakh Pandey Success Story: அன்று ரூ.75 கோடி சம்பளத்தை நிராகரித்து... இன்று பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரர் ஆன அலக் பாண்டே...!! யார் இவர்?

Nandhinipriya Ganeshan June 09, 2022 & 13:35 [IST]
Alakh Pandey Success Story: அன்று ரூ.75 கோடி சம்பளத்தை நிராகரித்து... இன்று பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரர் ஆன அலக் பாண்டே...!! யார் இவர்?Representative Image.

Physics Wallah Unicorn: ரூ. 75 கோடி சம்பளத்தை யாராவது வேண்டாம் என்று சொல்லுவோமா?அதுவும் இந்த கொரோனா காலத்தில் மாதந்தோறும் சரியான சம்பளம் வந்தாலே போதும் என்ற அளவிற்கு ஊழியர்களை நினைக்க வைத்துள்ளது. இப்படிபட்ட நிலையில் 75 கோடி சம்பளம் என்று சொன்னால் வேண்டாம் என்று சொல்ல மனசு வருமா? ஆனால், அப்படி ஒரு சம்பளம் கிடைத்தும் அதை வேண்டாம் என தூக்கி எறிந்திருக்கிறார் ஒருவர். அவரை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

அலக் பாண்டே

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் தான் இந்த அலக் பாண்டே. இவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்தார். அது தான் "பிசிக்ஸ் வாலா", இதன் மூலம் மாணவர்களுக்கு கல்வி சொல்லி கொடுத்து மாதம் 5000 சம்பாதித்து வந்தார். பின்னர், மாணவர்களிடையே பெரிய வரவேற்பை கிடைக்கத் தொடங்கியது. இவருடைய திறமையை கண்டு மற்றொரு கல்வி நிறுவனம் இவருக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க தயாரானது. ஆனால், அதனை நிராகரித்து அலக் பாண்டே தனது யூடியூப் சேனலான பிசிக்ஸ் வாலா மீது கவனம் செலுத்தினார். 

யூடியூப் டூ ஸ்டார்ட்அப்

தனது முயற்சியின் மூலம் எந்தவொரு டெக்னாலஜி ஆடம்பர காரணிகளையும், ஆடியோ வீடியோவை பயன்படுத்தாமல் மிக சாதாரணமாக தொடங்கப்பட்ட யூடியூப் சேனலில் நல்ல வருமானம் வருவதை அறிந்ததன் விளைவே யூனிகார்ன் ஸ்டார்ட்அப்பாக உருவெடுத்துள்ளது. ஆரம்பத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சேனலாக இருந்த பிசிக்ஸ் வாலா, இன்று ஒரு எட்டெக் யுனிகார்ன் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

பிசிக்ஸ் வாலா யூனிகார்ன்

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான பிசிக்ஸ் வாலா முதல் முறையாக 100 மில்லியன் டாலர்களை (Rs. 750 crore) திரட்டி, யூனிகார்ன் கிளப்பில் தனது முதல் அடியை எடுத்து (physics wallah unicorn) வைத்துள்ளது. இதுவே, இந்தியாவின் 101 வது எட்டெக் யுனிகார்ன் நிறுவனமாகும். அந்த வகையில், தற்போது Physics Wallah நிறுவனத்தின் மதிப்பு 1.1 பில்லியன் டாலர் (Physics wallah net worth) ஆகும். 

என்ன செய்கிறது?

எட்டெக் நிறுவனமான பிசிக்ஸ் வாலா ஜே இ இ மற்றும் நீட் தேர்வுகளுக்கு பயிற்சி கொடுத்து வரும் ஒரு ஆன்லைன் நிறுவனமாகும். PhysicsWallah தற்போது 18 நகரங்களில் 20க்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டுள்ளது, 2022-23 கல்வியாண்டில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், கூகுள் ப்ளே ஸ்டோரில் அதன் பயன்பாட்டில் 5.2 மில்லியன் பதிவிறக்கங்களையும், யூடியூப்பில் 6.9 மில்லியன் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது. 

பாண்டேவின் கனவு:

எளிய குடும்பத்தில் பிறந்த அலக், இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற கனவே 77 கோடியை மறுக்க காரணமாகும். ஆம், பிற்படுத்தப்பட்ட மக்களின் குழந்தைகளை மருத்துவராக படிக்க வைக்க வேண்டும் என்ற இவரின் கனவு இவரை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது. 

மற்ற நிறுவனங்களின் நிலை

எட்டெக் துறையில் இப்போது சூழ்நிலை படும்போசமா இருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அலக்கின் இந்த தொலை நோய்க்கு பார்வை போட்டி நிறுவனங்களை மிக குறுகிய காலத்திலேயே அச்சரியப்பட வைத்துள்ளது. மற்றொரு பிரபல எட்டெக் நிறுவனமான அனாகாடமியின் 2021 ஆம் வருவாய் விகிதம் 398 கோடியாம். ஆனால், பிசிக்ஸ் வாலாவின் வருவாய் விகிதம் அதே ஆண்டில் 350 கோடியாம். மற்ற நிறுவனங்கள் விளம்பரங்களுக்காக பல கோடி செலவழித்திருக்கிறார்களாம், ஆனால் பிசிக்ஸ் வாலா விளம்பரத்திற்கு எந்த பணத்தையும் செலவழிக்கவில்லையாம்.

அலக் பாண்டே (alakh pandey) அன்று 75 கோடி ரூபாய் சம்பளத்தை நிராகரித்ததால் தான், இன்று அவரால் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவு நினைவாகி (success story of physics wallah in tamil)  வருகிறது.. இது அனைத்தும் அவருடைய திறமைக்கு கிடைத்த பரிசே.... இவருடைய இந்த வெற்றிப் பயணம் மேலும் தொடர வேண்டும். 


Gautam Adani Success Story Tamil: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர்… அசத்தும் அதானி..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்