Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Annapurna Finance Funding: அன்னபூர்ணா ஃபைனான்ஸ் புதுசா ஃபண்ட் (Fund) ரைஸ் பண்ணிருக்காங்க... எவ்வளவு தெரியுமா?

Nandhinipriya Ganeshan June 25, 2022 & 15:30 [IST]
Annapurna Finance Funding: அன்னபூர்ணா ஃபைனான்ஸ் புதுசா ஃபண்ட் (Fund) ரைஸ் பண்ணிருக்காங்க... எவ்வளவு தெரியுமா?Representative Image.

Annapurna Finance Funding: புவனேஷ்வரை சேர்ந்த மைக்ரோ ஃபைனான்ஸ் லெண்டர் அன்னபூர்ணா ஃபைனான்ஸ், நேற்று (ஜீன் 24,2022) பிரெஞ்ச் டெவலப்மென்ட் ஏஜென்சியின் (AFD) தனியார் துறை நிதியுதவிப் பிரிவான Proparco-விடமிருந்து சீரிஸ் A2 நிதிச் சுற்றில் 15 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. 

கடந்த 15 மாதங்களில் அன்னபூர்ணா நிறுவனத்தால் திரட்டப்பட்ட நான்காவது நிதியுதவியாகும். அந்த வகையில் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 100 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. 

மேலும், கடந்த மார்ச் 2021 இல், நுவீன் குளோபல் இம்பாக்ட் ஃபண்டிலிருந்து $30 மில்லியனையும், அதைத் தொடர்ந்து நவம்பரில் DEG இலிருந்து $20 மில்லியன் நிதியையும், டிசம்பர் மாதத்தில் Encourage Capital, Acion மற்றும் அதன் தற்போதைய முதலீட்டாளரான Oikocredit ஆகியவற்றிலிருந்து $35 மில்லியனையும் திரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

2009 ஆம் ஆண்டு கோபிந்த சந்திரா பட்டநாயக் மற்றும் திப்யஜோதி பட்டநாயக் ஆகியோரால் நிறுவப்பட்ட அன்னபூர்ணா ஸ்டார்ட்அப் ஆர்பிஐ பதிவுசெய்யப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனம் - மைக்ரோ ஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூசன் ஆகும். இங்கு, தனிநபர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு மைக்ரோ கிரெடிட் கடன்கள், வீட்டு மேம்பாடு மற்றும் MSME கடன்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. 

இதுவரை 20 மாநிலங்களில் தனது இருப்பை நிலைநாட்டியுள்ளது. மேலும், ரூ. 6,500 கோடிக்கு மேலான சொத்துக்கள் நிர்வாகத்தின் கீழ் இருப்பதாக கூறப்படுகிறது. 

 

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்