Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Funding Roundup: இந்த வார ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஃபண்டிங் விபரங்கள்.. [ஜூலை 18-23]

Nandhinipriya Ganeshan July 24, 2022 & 21:15 [IST]
Weekly Funding Roundup: இந்த வார ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஃபண்டிங் விபரங்கள்.. [ஜூலை 18-23]Representative Image.

Weekly Funding Roundup: இந்த வாரத்தில் மட்டும் 29 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து மொத்தம் $189 மில்லியனை பெற்றிருக்கின்றன. இதில் ஐந்து நிறுவனங்களின் தொகைகள் மட்டும் வெளியிடப்படவில்லை. இந்த வாரத்தின் மதிப்பை சென்ற வாரத்தோடு ஒப்பிடுகையில் 58% வீழ்ச்சியடைந்துள்ளது. சென்ற வாரத்தில் 30 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் $448 மில்லியனை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Fi Money

பெங்களூரை சேர்ந்த நியோ-பேங்கிங் பிளாட்ஃபார்மான Fi Money, ஆல்பா வேவ் வென்ச்சர்ஸிடம் இருந்து சீரிஸ் சி நிதிச்சுற்றில் 45 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 355 கோடி) பெற்றது.

Niyo Solutions

ஃபின்டெக் ஸ்டார்ட் அப்பான நியோ, மல்டிபிள்ஸ் ஆல்டர்நேட் அசெட் மேனேஜ்மென்ட்டிடமிருந்து $30 மில்லியனை திரட்டியது.

Eka Care

பெங்களூரை சேர்ந்த ஹெல்த்டெக் ஸ்டார்ட்அப் எகா கேர் சீரிஸ் ஏ சுற்றில் ஹம்மிங்பேர்ட் வென்ச்சர்ஸ், மிரே அசெட்ஸ், ஆதித்யா பிர்லா வென்ச்சர்ஸ், பின்ன பன்சால், வெர்லின்வெஸ் மற்றும் 3one4 கேபிடல் ஆகிய முதலீட்டாளர்களிடமிருந்து $15 மில்லியனை பெற்றது.

Fitterfly

டிஜிட்டல் தெரபியூட்டிக்ஸ் துறையில் பணிபுரியும் ஹெல்த்டெக் நிறுவனமான ஃபிட்டர்ஃபிளை, ஃபயர்சைட் வென்ச்சர்ஸ் தலைமையிலான ப்ரீ-சீரிஸ் ஏ நிதிச்சுற்றில் இருந்து $12 மில்லியனை திரட்டியுள்ளது.

Creative Galileo

எட்டெக் ஸ்டார்ட்அப்பான கிரியேட்டிவ் கலிலியோ, கலாரி கேபிடல், அஃபிர்மா கேபிடல், ஈஸ்ட் வென்ச்சர்ஸ், வேலியண்ட் எம்ப்ளாயி இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து $7.5 மில்லியனை (இந்திய மதிப்பில் ரூ. 60 கோடி) பெற்றுள்ளது.

DrinkPrime

பெங்களூரை சேர்ந்த வாட்டர் சுத்திகரிப்பு ஸ்டார்ட்அப்பான DrinkPrime, 9 யூனிகார்ன்ஸ், Omidyar Network India, மற்றும் Sequoia Surge போன்ற மார்க்யூ முதலீட்டாளர்களிடமிருந்து, சீரிஸ் ஏ நிதிச்சுற்றில் இருந்து 7.5 மில்லியனை பெற்றுள்ளது.

Lal10

MSME -ஐ மையமாகக் கொண்ட மொத்த விற்பனை தளமான Lal10, யுஜ் வென்ச்சர்ஸ் மற்றும் பியோண்ட் கேபிட்டல் வென்ச்சர்ஸ் தலைமையிலாஅன் ப்ரீ-சீரிஸ் ஏ நிதிச்சுற்றில் இருந்து 5.5 மில்லியனை திரட்டியுள்ளது.

Plaeto

குழந்தைகளுக்கான காலணிகளை தயாரிக்கும் பெங்களூரை சேர்ந்த டி2சி ஃபூட்வேர் பிராண்டான பிளாட்டோ, Florintree Advisors மற்றும் பல முதலீட்டாளர்களிடம் இருந்து $5 மில்லியனை (இந்திய மதிப்பில் 40 கோடி) பெற்றுள்ளது.

Tags:

Weekly funding in tamil | Weekly funding roundup in tamil | Weekly Funding Galore| Startup funding roundup | Startup news tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்