Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rashmika Mandanna: ஸ்டார்ட்அப்பில் முதலீடு செஞ்சிருக்கும் ரஷ்மிகா மந்தனா… எதுல தெரியுமா?

Nandhinipriya Ganeshan June 23, 2022 & 20:00 [IST]
Rashmika Mandanna: ஸ்டார்ட்அப்பில் முதலீடு செஞ்சிருக்கும் ரஷ்மிகா மந்தனா… எதுல தெரியுமா?Representative Image.

இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் பியூட்டி பிராண்டுகளில் ஒன்றான PlumGoodness, 100% வீகன் அழகு சாதனப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் ஒப்பனை மற்றும் அழகு சாதனப் பொருட்களிலும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்களான பாராபென்ஸ் மற்றும் பித்தலேட்ஸ் பயன்படுத்தபடுவது கிடையாது. ஒவ்வொரு பொருட்களும் முழுக்க முழுக்க பாதுகாப்பான இயற்கை பொருட்களால் தயார் செய்யப்படுகின்றன. இதனாலையே பலரும் இந்த பிராண்டை விரும்புகிறார்கள். அந்த வகையில், பாலிவுட் நடிகையான ரஷ்மிகா மந்தனா இந்த பிராண்டை ஆதரிக்கும் விதமான ஒரு சிறப்பான செயலை செஞ்சிருக்காங்க. 

ரஷ்மிகா மந்தனா:

மகாராஷ்டிராவை சேர்ந்த டி2சி வீகன் ஸ்டார்ட்அப்பான பிளமில், ரஷ்மிகா ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அதன் நுகர்வோர் தளத்தை விரிவுப்படுத்துவதற்காக, பிளம் ஸ்டார்ட்அப்பின் பிராண்ட் அம்பாஸ்ட்டராகவும் மந்தனா சேர்ந்துள்ளார். புஷ்பா படத்திற்கு பிறகு ரஷ்மிகா மந்தனா அனைத்து மொழி திரையுலகிலும் மாஸ் ஹீரோனியாக வலம் வருகிறார். இதனால், இவருடைய மார்க்கெட்டும் உயர்ந்துக் கொண்டே வருகிறது. 

இந்த முதலீடு குறித்து பேசிய மந்தனா, "இந்த உலகில் உண்மையான நன்மையை சேர்க்கும் ஆர்வமுள்ள பிராண்டிற்கு ஆதரவளித்து, முதலீட்டாளராக வருவதற்கும், பிரதிநிதியாக வருவதற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும், வரவிருக்கும் காலத்தில் பிளம் மிகப்பெரிய பிராண்டாக வளர்ச்சியடையும் என்றும்" தெரிவித்துள்ளார். 

பிளம்குட்நஸ் பிராண்டு:

2013 ஆம் ஆண்டு ஷங்கர் பிரசாத்தால் நிறுவப்பட்ட பிளம், அதன் ஆஃப்லைன் செயல்பாட்டில், இந்தியாவின் 250 நகரங்களில் கிட்டத்தட்ட 1000 மல்டி-பிராண்ட் அவுட்லெட்ஸ் மற்றும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பிரத்யேக பிராண்ட் அவுட்லெட்ஸை கொண்டுள்ளது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் விகிதம் சுமார் 300 கோடி ரூபாயாக இருக்குமாம். அடுத்த 12 மாதங்களில் இதன் மதிப்பு இரட்டிப்பாகும் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

பிளம்குட்நஸ் Funding:

கடந்த மார்ச் மாதம், பிளம் A91 பார்ட்னர்ஸ், யூனிலீவர் வென்ச்சர்ஸ் மற்றும் ஃபேரிங் கேபிட்டல் ஆகியவற்றிலிருந்து அதன் சீரிஸ் C நிதிச்சுற்றில் 35 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றது. அதேபோல், 2020 ஆம் ஆண்டு ஃபேரிங் கேபிடல், ட்ரிஃபெக்டா கேபிடல் மற்றும் யூனிலீவர் வென்ச்சர்ஸ் ஆகியவற்றிலிருந்து அதன் தொடர் B நிதிச் சுற்றில் 110 கோடி ரூபாய் நிதியாக பெற்றது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்