Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

ஏழ்மையும் நிரந்தமில்லை என்று உலகிற்கு உணர்த்தியவர்கள்.. பிரம்மிக்க வைக்கும் உண்மை தகவல்கள்..

Nandhinipriya Ganeshan September 09, 2022 & 15:30 [IST]
ஏழ்மையும் நிரந்தமில்லை என்று உலகிற்கு உணர்த்தியவர்கள்.. பிரம்மிக்க வைக்கும் உண்மை தகவல்கள்..Representative Image.

கோடீஸ்வரன் என்று சொல்வதற்கு பெருமையாகவும், கர்வமாகவும் இருந்தாலும், அந்த உச்சத்தை அடைவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. அவனுக்கு என்னப்பா பணக்காரன் என்று நாம் சில நொடிகளில் சொல்லிவிட்டும் கலாய்த்துவிட்டும் சென்றுவிடுவோம். ஆனால், ஒரு மனிதன் அந்த இடத்தை அடைய பயணித்த பாதையானது பல சறுக்கல்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், அவமானங்கள், நஷ்டங்கள் நிறைந்தவை. 

அதை அனைத்தையும் சமாளித்து அந்த இடத்தை பிடித்ததில் அவர்கள் கர்வம் கொள்வதில் தவறேதும் இல்லையே. அந்தவகையில், அனைத்து சவால்களையும் சமாளித்து இந்த உலகில் தனக்கென ஒரு தனி மரியாதையையும், பெயரையும் நிலைநிருத்தி கர்வத்துடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் கோடீஸ்வரர்களின் கடந்த கால வாழ்க்கையை பற்றிய தான் பார்க்கப்போகிறோம். 

எலான் மஸ்க் [Elon Musk]

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஓனரான எலான் மஸ்க், அவருடைய ட்ரெண்டிங் டிவீட்ஸ் மற்றும் விண்வெளி முயற்சிக்காக இணையத்தில் எப்போதும் வைராலாகி வருபவர். கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவில் கம்ப்யூட்டர் கேம் விற்பனை செய்து கொண்டிருந்தாராம். அப்படி தனது சொந்த தொழிலின் மூலம் 500 டாலர் சாம்பாதித்தாராம். அதற்கு பின், கனடாவுக்கு குடிபெயர்ந்து கம்ப்யூட்டர் எஞ்சினியராக தன்னுடைய வேலையை தொடங்கினாராம். தற்போது இவருடைய சொத்து மதிப்பு சுமார் 259.8 பில்லியன் டாலர் ஆகும்.

ஜெப் பெசோஸ் [Jeff Bezos]

அனைத்து பொருட்களையும் வீடு தேடி வரும் அளவிற்கு செய்தவர் ஜெப் பெசோஸ், உலகின் நம்பர் ஒன் ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர். உலகின் டாப் பணக்காரர் ஆன இவர் முதன் முதலில் மெக்டொனால்டு உணவகத்தில் ஃப்ரை சமையல்காரராக இருந்துள்ளார். 1980 இல் தொடங்கிய இந்த வேலையில் அவரது சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3 டாலர்க்கும் குறைவாகவே இருந்தது. இதன் மூலம் வர்த்தக நுணுக்கங்களை கற்றுக் கொண்ட ஜெப் பெசோஸ், தற்போது 152.9 பில்லியன் மதிப்பிலான சொத்துக்கு உரிமையாளராக வளர்ந்துள்ளார்.

வாரன் பப்ஃபெட் [Warren Buffett] 

பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் ஓனரான வாரன் பப்ஃபெட் உலகளவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் பரவலாக மதிக்கப்படும் முதலீட்டாளர்களில் ஒருவர். பஃபெட்டின் முதலீட்டுத் தத்துவம் தான் உலகம் முழுவதும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. அந்த அளவிற்கு தொழில் நுணுக்கங்கள் அறிந்தவர். தற்போது 98.7 பில்லியன் மதிப்பிலான சொத்துக்கு உரிமையாளரான பப்ஃபெட், ஆரம்பத்தில் வாஷிங்டனில் நியூஸ் பேப்பர் போடும் வேலை செய்துக் கொண்டிருந்தாராம். இவருடைய மாதச் சம்பளம் 175 டாலர். 

வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென்றால் 'கடினமாக உழைக்காதே' - வாரன் பஃபெட்!

ஜியோர்ஜியோ அர்மானி [Giorgio Armani]

தனது நேர்த்தியான ஆடை வடிவமைப்பால் ஃபேஷன் உலகின் ஜாம்பவனாக திகழ்பவர் ஜியோர்ஜியோ அர்மானி. இத்தாலியின் மிகப்பெரிய ஆடை வடிவமைப்பாளரான இவர் ஆரம்பத்தில் இத்தாலி நாட்டின் இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது 20 நாள் விடுமுறையில் சென்ற இவர், ஆடை வடிவமைப்பில் தனக்கு இருந்த ஈடுபாட்டை உணர்ந்து, ராணுவ பணி முடிந்து மிலனில் புகழ்பெற்ற விற்பனை நிலையில் பணியை தொடங்கினார். 

பில் கேட்ஸ் [Bill Gates]

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஓனரான பில் கேட்ஸ் சிறு வயதிலிருந்தே தொழில்நுட்பத்தின் மீதான இருந்த ஆர்வத்தில், உயர்நிலை பள்ளியில் படிக்கும்போதே TRW இல் கம்ப்யூட்டர் புரோகிராமராக வேலையை தொடங்கினார். இப்போது உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். 

ஒரு பேப்பர் போடும் பையனாகவோ அல்லது கம்ப்யூட்டர் புரோகிராமராகவோ உங்களுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கினால், நீங்களும் ஒரு பில்லியனராக மாறுவீர்கள் என்று உறுதியாக சொல்லவில்லை. ஆனால், இந்த கோடீஸ்வரர்களின் தொழில் வாழ்க்கையில் இருந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஃபேஷன், முதலீடு, தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும், உங்களுடைய ஆர்வத்தைப் பின்பற்றினால் பெரிய நிலைக்கு வந்துவிடலாம் என்பதை அறிந்துக்கொள்ள முடியும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்