Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

India's 103rd Unicorn: இந்தியாவின் 103வது யூனிகார்னாக உருவெடுத்த பெங்களூரை சேர்ந்த SaaS ஸ்டார்ட்அப்....!!

Nandhinipriya Ganeshan June 22, 2022 & 17:30 [IST]
India's 103rd Unicorn: இந்தியாவின் 103வது யூனிகார்னாக உருவெடுத்த பெங்களூரை சேர்ந்த SaaS ஸ்டார்ட்அப்....!! Representative Image.

India's 103rd Unicorn: பெங்களூரை சேர்ந்த SaaS ஸ்டார்ட்அப் நிறுவனமான LeadSquared, வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து சீரிஸ் C நிதி சுற்றில் $153 மில்லியன் திரட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 103 வது யூனிகார்னாக உருவெடுத்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல், இந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே எட்டெக் நிறுவனமான பிசிக்ஸ் வாலா (PhysicsWallah) மற்றும் ஆன்லைன் பியூட்டி மற்றும் குரூமிங் புராடக்ட் சந்தையான Purplle ஆகியவை யூனிகார்ன் கிளப்பில் நுழைந்து, இந்தியாவின் 101வது மற்றும் 102வது யூனிகார்ன்களாக மாறியது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்பு LeadSquared நிறுவனம் 2020 ஆம் ஆண்டு சீரிஸ் B நிதிச்சுற்றில் 32 மில்லியன் டாலர்களையும், 2019 ஆம் ஆண்டு ஸ்டேக்போட் கேபிடல் தலைமையிலான அதன் சீரிஸ் A நிதிச்சுற்றில் 3 மில்லியன் டாலர்களையும் திரட்டியுள்ளது.

மேலும், தற்போது திரட்டிய நிதியுதவியை கொண்டு அடுத்த 18 மாதங்களில் அதன் பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி நிலேஷ் படேல் தெரிவித்துள்ளார். 

2011 ஆம் ஆண்டு படேல், பிரசாந்த் சிங் மற்றும் சுதாகர் கோர்ட்டி (LeadSquared founder) ஆகியோரால் நிறுவப்பட்ட LeadSquared, உள்நாட்டில் ஆட்டோமேஷன் தீர்வுகள், மார்க்கெட்டிங் மற்றும் end-to-end sales ஆகியவற்றை வழங்கி வருகிறது. ஸ்டார்ட்அப்பானது எட்டெக், ஹெல்த்கேர், பிஎஃப்எஸ்ஐ, ரியல் எஸ்டேட், ஆட்டோமோடிவ் போன்ற தொழில்களுக்கும் சேவை செய்துவருகிறது. 

இந்த ஸ்டார்டப் 40 நாடுகளில் 2,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களையும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொபைல் பயனர்களையும் கொண்டுள்ளது. அதன் வாடிக்கையாளர்களில் Uni, Practo, Byju’s, Dunzo, Olx உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும். 


அன்று ரூ.75 கோடி சம்பளத்தை நிராகரித்து... இன்று பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரர் ஆன அலக் பாண்டே...!! யார் இவர்?


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்