Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Automatic Dosa-Maker: தோசை சுடும் இயந்திரம்.. பட்டனை தட்டினால் போதும்.. சுடசுட தோசை ரெடி..!!

Nandhinipriya Ganeshan August 25, 2022 & 13:20 [IST]
Automatic Dosa-Maker: தோசை சுடும் இயந்திரம்.. பட்டனை தட்டினால் போதும்.. சுடசுட தோசை ரெடி..!!Representative Image.

தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறது என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. உலகளவில் பல அதியசங்களை படைத்து வரும் லேட்டஸ்ட்ஸ் தொழில்நுட்ப வசதிகள் மனிதர்களுக்கு வேலைகளை சுலபமாக்கினாலும் ஒருபுறும் சோம்பேறித்தனமாக்கி வருகிறது. அதற்கு உதாரணம் சமையலறையை எடுத்துக் கொள்ளலாம். அந்த காலத்து பெண்கள் சமையலறையில் செய்யக்கூடிய வேலைகளை இந்த காலத்து பெண்கள் செய்வார்களா என்றால், சற்று யோசிக்கக் கூடிய விஷயமாக தான் இருக்கிறது. 

ஏனெனில், அந்தளவிற்கு டெக்னாலஜி மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. கேஸ் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், வாசிங் மிசின் என பலவிதமான வசதிகள் வந்து மக்களை தன்வசப்படுத்தி வந்தாலும், லேட்டஸ்ட் வெர்சனாக சமீபத்தில் தோசை சுடும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

உண்மையில், நிறைய அம்மாக்களின் கவலையே அடுப்படியில் நின்று மணிக்கணக்கில் தோசை சுட வேண்டும் என்று தான். அதுவும் வீட்டில் உறவினர்கள் வந்துவிட்டால் அவ்வளவு தான் வேலை இரண்டு மடங்காவிடும். ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தோசை சுடும் இயந்திரம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, அம்மாக்களின் கவலையையும் போக்கியுள்ளது. பிரிண்டர் போல் இருக்கும் இந்த இயந்திரத்தில் ஒரு பக்கத்தில் தோசை மாவு ஊற்றினால், மறுபக்கம் சுடச்சுட முறுகலான தோசை வெளியே வருகிறது.

இந்த இயந்திரத்தின் வீடியோவை சமந்தா என்ற பெண் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். அதாவது, அந்த வீடியோவில் அந்தபெண் ஒரு பக்கத்தில் தோசை மாவை ஊற்றி, தோசையின் தடிமன் அளவு மற்றும் தோசையின் எண்ணிக்கையை குறிப்பிடுகிறார். சிறிது நேரம் கழித்து, எத்தனை தோசை வேண்டுமோ அத்தனை தோசையையும் அந்த இயந்திரம் தருகிறது. இந்த வீடியோ தற்போது வேறலெவலில் இணையத்தை கலக்கி வருகிறது. இனி வீட்டில் அம்மாக்களின் வேலையை குறைப்பதோடு, தோசைக்கல்லின் வேலையும் குறைய ஆரம்பித்துவிடும். 

சென்னையை சேர்ந்த Evochef ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் இந்த தானியங்கி தோசை மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்