Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தமிழ் தொழில்முனைவோர்களுக்காக சென்னையில் முதல் முறையாக நடக்கும் சர்வதேச உச்சி மாநாடு!| Global Tamil Startup Investors Summit

Gowthami Subramani Updated:
தமிழ் தொழில்முனைவோர்களுக்காக சென்னையில் முதல் முறையாக நடக்கும் சர்வதேச உச்சி மாநாடு!| Global Tamil Startup Investors SummitRepresentative Image.

FiTEN என்ற FeTNA சர்வதேச தொழில் முனைவோர் வலையமைப்பு, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் உடன் இணைந்து சென்னையில் உச்சி மாநாட்டை நடத்துகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள ஸ்டார்ட் அப்கள் மற்றும் உலகளவில் உள்ள தமிழ் முதலீட்டார்களுக்குப் பயனளிப்பதாகவும், வணிகத்தை மேம்படுத்துவதற்கும் நடத்தப்படுவதாகும். FeTNA வின் வருடாந்திர மாநாடுகளின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இந்நிகழ்வு வழக்கமாக அமெரிக்காவில் நடைபெறும். ஆனால், இந்த முறை சென்னையில் முதன் முறையாக நடைபெற உள்ளது.

சென்னையில் நடைபெறும் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், தமிழ் தொழில் முனைவோர்களை உலகளவில் இணைத்து பயன்பெறுவது ஆகும்.

தமிழ் தொழில்முனைவோர்களுக்காக சென்னையில் முதல் முறையாக நடக்கும் சர்வதேச உச்சி மாநாடு!| Global Tamil Startup Investors SummitRepresentative Image

நடைபெறும் நாள் மற்றும் இடம்

சர்வதேச அளவில் நடைபெறும் தமிழ் தொழில்முனைவோர்களுக்கான இந்த உச்சி மாநாடு நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விவரங்களைப் பற்றி காண்போம்.

மாநாடு நடைபெறும் நாள்: ஜனவரி 09, 2023 திங்கள்கிழமை

மாநாடு நடைபெறும் இடம்: லீலா பேலஸ், சென்னை, தமிழ்நாடு

மாநாடு நடைபெறும் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

தமிழ் தொழில்முனைவோர்களுக்காக சென்னையில் முதல் முறையாக நடக்கும் சர்வதேச உச்சி மாநாடு!| Global Tamil Startup Investors SummitRepresentative Image

மாநாட்டில் பங்கேற்பவர்கள்

சென்னையில் நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில், அரசாங்க உயர் அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், தொழில்துறை தொலைநோக்கு பார்வையாளர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், தொடக்க நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள், CXOS, புத்தாக்க மையங்கள், இன்குபேஷன் மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்

FeTNA சர்வதேச தொழில் முனைவோர் நெட்வொர்க்-ன் இந்த உச்சி மாநாடு உலகளாவிய தமிழ் முனைவோரை இணைக்கும் குறியீடாகத் திகழ்கிறது.

தமிழ் தொழில்முனைவோர்களுக்காக சென்னையில் முதல் முறையாக நடக்கும் சர்வதேச உச்சி மாநாடு!| Global Tamil Startup Investors SummitRepresentative Image

மாநாட்டின் நோக்கம்

உலகளாவிய தமிழ் தொழில்முனைவோரை ஒருங்கிணைப்பதற்கான தளமாக

தமிழ் தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல்

ஸ்டார்ட்அப்களை முதலீட்டாளர்களுடன் இணைப்பதற்கு,

ஐடியாக்கள் மற்றும் மூலதனத்தை ஒன்றாக கொண்டு வருதல்

கல்வி நிறுவனங்களில் தொழில் முனைவோரை ஊக்குவித்தல்

தொழில்முனைவோர்களின் வழிகாட்டியாக

தமிழ் தொழில்முனைவோர்களுக்காக சென்னையில் முதல் முறையாக நடக்கும் சர்வதேச உச்சி மாநாடு!| Global Tamil Startup Investors SummitRepresentative Image

சிறப்பம்சங்கள்

குழு விவாதம் (Panel Discussion)

இணை அமர்வுகள் (Parallel Sessions)

ஸ்டார்ட்அப் பிட்ச் (Startup Pitch)

வலைதள அமர்வுகள் (Networking Sessions)

கலாச்சார நிகழ்வுகள் (Cultural Events)

தமிழ் தொழில்முனைவோர்களுக்காக சென்னையில் முதல் முறையாக நடக்கும் சர்வதேச உச்சி மாநாடு!| Global Tamil Startup Investors SummitRepresentative Image

நுழைவுக் கட்டணம்

சென்னையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

DPIIT பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் – ரூ.2,000

பிரதிநிதிகள் – ரூ.5,000

தமிழ் தொழில்முனைவோர்களுக்காக சென்னையில் முதல் முறையாக நடக்கும் சர்வதேச உச்சி மாநாடு!| Global Tamil Startup Investors SummitRepresentative Image

மாநாட்டில் கலந்து கொள்ள பதிவு செய்யும் முறைகள்

பதிவு செய்ய வேண்டிய இணையதளம்: https://www.fiten.org/registration/

பதிவு முடிவடையும் தேதி: ஜனவரி 09, 2023

மேலும் சில தகவல்களுக்கு,

https://www.fiten.org/

https://startuptn.in/

மின்னஞ்சல் முகவரி

fitenchair@fetna.org

investments@startuptn.in

சென்னையில் முதல் முறையாக நடத்தப்படும் சர்வதேச அளவிலான தமிழ் தொழில்முனைவோர்களுக்கான உச்சி மாநாட்டில்  கலந்து கொண்டு, உங்கள் வணிகத்தை மேம்படுத்தலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்