Fri ,Feb 23, 2024

சென்செக்ஸ் 73,174.40
16.16sensex(0.02%)
நிஃப்டி22,231.75
14.30sensex(0.06%)
USD
81.57
Exclusive

Dream Tamilnadu: தமிழகத்திற்காக ஒன்றாக இணைந்து கனவு காண தயாரா..? கனவு தமிழத்தில் இன்டர்ன்ஷிப் வேலைவாய்ப்பு!!

Nandhinipriya Ganeshan May 16, 2022 & 09:00 [IST]
Dream Tamilnadu: தமிழகத்திற்காக ஒன்றாக இணைந்து கனவு காண தயாரா..? கனவு தமிழத்தில் இன்டர்ன்ஷிப் வேலைவாய்ப்பு!!Representative Image.

Dream Tamilnadu: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லயன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் 2018 ஆம் ஆண்டு Kissflow நிறுவனத்தின் தலைவரும், கனவு தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான சுரேஷ் சம்பந்தம் அவர்கள் ஒரு திட்ட முன்வரைவை வெளியிட்டார். அது தான் "கனவு தமிழ்நாடு" இயக்கம். இது மிகக் குறுகிய காலத்தில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இலக்காக மாறி பல சாதனைகளை படைத்து வருகிறது.

அதோடு, இந்த பொருளாதார வளர்ச்சி செல்வந்தர்களுக்கானதாக மட்டும் இல்லாமல், அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்காகவும் இருந்து வருகிறது. அதற்காக, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் வாய்ப்புகளையும் வளங்களையும் எடுத்துக்காட்டி வளர்ச்சியை மேம்படுத்தி வருகின்றனர்.

கனவு தமிழகத்தில் வேலைவாய்ப்பு:

இந்த இயக்கம் தமிழகத்தின் இளைஞர்களின் மனதில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த அரசு எடுக்கும் ஒவ்வொரு முன்முயற்சிகளிலும் இவர்களின் பங்களிப்பு பெருமளவில் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், பலரும் அவ்வாய்ப்பிற்காக காத்துக்கொண்டும் இருக்கின்றனர். அப்படி, ஆவலோடு காத்திருக்கும் இளைஞர்களின் மனதை குளிர்விக்கும் விதமாக கனவு தமிழ்நாடு இயக்கம் ஒரு இன்டர்ன்ஷிப் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

இன்டர்ன்ஷிப் 2022-2023:

கனவு தமிழகத்தில் தற்போது இரண்டு பணிகளுக்கு இன்டர்ன்ஷிப் வேலைவாய்ப்பு (Dream Tamilnadu Internship 2022-2023) அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை செய்து பயனடையுங்கள்.

1. Research & Content Writing:

தகுதி:

 • இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர்கள் மற்றும் முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்கள்.
 • விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
 • மாணவர்களுக்கு தமிழில் பிழையின்றி எழுதுவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

குறிப்பு: Journalism, Political Science, Public Administration, Public Policy, Digital Journalism and Mass Communication ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Roles and responsibilities:

 • பயிற்சியாளர்கள் ஆறு வேலை நாட்களிலும் 4 மணிநேரம் அலுவலகத்தில் இருப்பார்கள்.
 • திட்டங்களின் யோசனை, கலந்துரையாடல், ஸ்கிரிப்டிங் மற்றும் வீடியோ தயாரிப்பு செயல்பாட்டில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
 • பல்வேறு வடிவங்களின் ஆராய்ச்சி மற்றும் அறிக்கை (தொலைபேசி நேர்காணல், இரண்டாவது கை அறிக்கை போன்றவை).
 • தேவைகளின் அடிப்படையில் கூட்டங்களை மெய்நிகர்/நேரில் ஏற்பாடு செய்தல்.
 • இன்டர்ன்ஷிப் காலம் ஆறு மாதம்.

நன்மைகள்:

 • உதவித்தொகை: ரூ. 7000 per month
 • இன்டர்ன்ஷிப் முடித்ததற்கான சான்றிதழ்

Apply Now

2. Social Media Intern:

தகுதி:

 • இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர்கள் மற்றும் முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்கள்.
 • விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
 • சோசியல் மீடியா மார்க்கெட்டிங்கில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.

குறிப்பு: B.B.A., M.B.A., மற்றும் B. COM (MM) மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Roles and responsibilities:

 • பயிற்சியாளர்கள் ஆறு வேலை நாட்களிலும் 4 மணிநேரம் அலுவலகத்தில் இருப்பார்கள்.
 • உள்ளடக்க காலெண்டர்களை வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் உருவாக்கவது.
 • பிராண்ட், இலக்குகள் மற்றும் நிறுவனத்தின் அனைத்து அம்சங்கள் உட்பட, நிறுவனத்தின் ஒட்டுமொத்த கருத்தை விளம்பரப்படுத்துவது.
 • சமூக ஊடகத் தளங்களுக்கான உள்ளடக்கத்தைத் (content) தேர்ந்தெடுப்பது.
 • அனைத்து சமூக தளங்களிலும் நிறுவனத்தின் சமூக ஊடங்களை கண்காணித்து கையாளுவது.

நன்மைகள்:

 • உதவித்தொகை: ரூ. 7000 per month
 • இன்டர்ன்ஷிப் முடித்ததற்கான சான்றிதழ்

Apply Now

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்