Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Layoffs 2022: மீண்டும் கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்...

Nandhinipriya Ganeshan June 30, 2022 & 09:25 [IST]
Layoffs 2022: மீண்டும் கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்...Representative Image.

BYJU's Layoff News: கடந்த ஆண்டு ஜூலையில் பிரபல எட்டெக் நிறுவனமான பைஜூஸ், எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான Toppr -ஐ ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கியது. தற்போது BYJU -க்கு சொந்தமான டாப்பர் எட்டெக் துறையில் கடும் சரிவு, பொருளாதார நெருக்கடியால் செலவுகளை குறைக்கும் எண்ணத்தில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

பைஜூஸ் வைட்ஹாட் ஜூனியர்:

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பைஜூஸ் -க்கு சொந்தமான மற்றொரு நிறுவனம் (WhiteHat Jr), செலவுகளைக் குறைப்பதற்காக சுமார் 300 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்த செய்தியே சமூக ஊடங்களில் தீயாய் பரவி வரும் வேளையில், அதற்குள் அதேநிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பைஜூஸ் வாங்கிய பெரும்பாலான ஸ்டார்ட்அப்களில் திடீர் பணிநீக்கங்கள் மற்றும் மறுசீரமைப்புகள் நடந்துக் கொண்டு வருகிறது. இதனால், இன்னும் சில எட்டெக் ஸ்டார்ட்அப்களில் ஏராளமான பணிநீக்கங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

424 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய பிரபல பெங்களூர் யூனிகார்ன் ஸ்டார்ட்அப்....

பைஜூஸ் டாப்பர்:

ஜிஷான் ஹயாத் மற்றும் ஹேமந்த் கோடெட்டி ஆகியோரால் 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது தான் டாப்பர். இது பல்வேறு பள்ளி வாரியங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகளை வழங்கிவருகிறது. இந்த நிறுவனத்தை பைஜூ ரவீந்திரன் சுமார் 150 மில்லியன் டாலருக்கு வாங்கினார். இதுவரை நன்றாக செயல்பட்டு, வருவாய் ஈட்டி வந்தது. 

ஆனால், கொரோனா கட்டுபாடுகள் விலகி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதால் கல்வித்துறை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உட்பட பெரும்பாலான நிறுவனங்கள் வருவாய் ஈட்டுவதில் பெரும் தாக்கத்தை சந்தித்து வருகின்றனர்.

இதில் சில எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் (Lido, Udayy) தங்களது கம்பெனியையே இழுத்து மூடும் நிலைக்கு வந்தன. இதில் டாப்பர் நிறுவனமும் ஒன்று. இதனால், வருவாயைவிட செலவுகள் அதிகம் இருக்கும் காரணத்தால், 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 500 ஆக உயரலாம் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது வெறும் ட்ரெய்லர் தான்... மெயின் பிச்சரே இனிமே தான் வரப்போகுது... அடுத்த ஆறு மாதங்களுக்கு திக் திக்... 

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்