Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமேசான், ஃபிளிப்கார்ட்டிற்கு இணையான அசுர வளர்ச்சி.... ஒரே நாளுல இத்தன மில்லியன் ஆர்டர்களா? வசூலில் மிரட்டும் மீஷோ..!!

Nandhinipriya Ganeshan June 13, 2022 & 12:30 [IST]
அமேசான், ஃபிளிப்கார்ட்டிற்கு இணையான அசுர வளர்ச்சி.... ஒரே நாளுல இத்தன மில்லியன் ஆர்டர்களா? வசூலில் மிரட்டும் மீஷோ..!!Representative Image.

Meesho Online Shopping: இந்தியாவின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான மீஷோ, "ஒரு நாள் விற்பனை" (One day sale event) நிகழ்வினை கடந்த ஜூன் 6, 2022 அறிவித்திருந்தது. அதில் ஒரே நாளில் மட்டும் சுமார் 5.35 மில்லியன் ஆர்டர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

பொதுவாக, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் தான் இந்த மாதிரியான ஆஃபர்கள் அறிவிக்கப்படும். இதற்காக நம்மில் பலரும் காத்துக்கொண்டிருப்போம். அதாவது, இம்மாதிரியான ஆஃபரில் சில பொருட்கள் அல்லது எல்லா பொருட்களுக்கும் 50% விலை குறைப்பு செய்து விற்பனை செய்வார். இதன் மூலம் பல மில்லியன் ஆர்டர்களை பதிவு செய்வது வழக்கம். பெரிய நிறுவனங்கள் இவ்வாறு செய்வதில் ஆச்சரியப்படுவதிற்கு இல்லை.

ஆனால், இந்தியாவில் சின்னதாக தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப் குறுகிய நாளில் இத்தகையை சாதனையை படைத்திருப்பது மிகப் பெரிய விஷயமாக பேசப்படுகிறது. மீஷோ இதேப்போல் கடந்த வருடமும் ஜூன் 6 ஆம் தேதி இதே ஆஃபரை அறிவித்திருந்தது. அப்போது 1 மில்லியன் ஆர்டர்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இந்தாண்டு இந்த நிகழ்வின் போது அதன் மதிப்பு ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது.

அதாவது, ஜூன் 6, 2021 அன்று 1 மில்லியன் ஆர்டர்கள் - ஜூன் 5, 2022 அன்று 5.35 மில்லியன் ஆர்டர்கள். தற்போது மோசமான பொருளாதார நிலைமைகள் இருந்தபோதிலும் இந்த ஈ-காமர்ஸ் தளம் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த ஒரு நாள் விற்பனையில் சுமார் 1 லட்சம் விற்பனையாளர்கள் கலந்துக்கொண்டார்களாம்.

வணிகம்-வழக்கமாக (BAU) ஒப்பிடும்போது, விற்பனை நிகழ்வின் போது பங்குபெறும் விற்பனையாளர்கள் ஆர்டர்களில் சுமார் 217 சதவீதம் அதிகரித்துள்ளார்களாம். மேலும், இதன் மூலம் 26,000க்கும் மேற்பட்ட புதிய விற்பனையாளர்கள் கலந்துகொண்டதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. 

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மேக்ரோ பொருளாதார நிலைமைகள் இருந்தபோதிலும், கடந்த 6 மாதங்களில், விற்பனை நிகழ்வுகளில் விற்பனையாளர்களின் பங்கேற்பில் சுமார் 3.75 மடங்கு அதிகரிப்பை நாங்கள் கண்டுள்ளோம், என்று மீஷோ நிறுவனத்தின் வணிக CXO (business CXO) உட்கிரிஷ்டா குமார் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்