Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Funding Galore: இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [ ஜூன் 06 - ஜூன் 11]...

Nandhinipriya Ganeshan June 12, 2022 & 17:30 [IST]
Weekly Funding Galore: இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [ ஜூன் 06 - ஜூன் 11]...Representative Image.

Weekly Funding Galore: இந்த வாரம், 37 இந்திய ஸ்டார்ட்அப்கள் நிதி திரட்டியுள்ளன. அதில் 31 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 600.30 மில்லியன் டாலர்கள் பெற்றுள்ளன. CRED மற்றும் PhysicsWallah ஆகிய இரண்டு நிறுவனங்கள் முறையே 140 மில்லியன் டாலர்கள் மற்றும் 100 மில்லியன் டாலர்கள் பெற்று நிதியுதவி பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. கடந்த வாரத்தை பொறுத்த வரை மொத்தம் 33 உள்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 525.81 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதியை திரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரத்தின் ஒப்பந்தங்கள்:

ஃபின்டெக் யூனிகார்ன் CRED, டைகர் குளோபல், சோஃபினா வென்ச்சர்ஸ், ஜிஐசி, டிராகோனர், மற்றும் ஃபால்கன் எட்ஜ் ஆகியவற்றிலிருந்து சீரிஸ் F நிதிச் சுற்றியில் 140 மில்லியன் டாலர்கள் திரட்டியது. 

எட்டெக் நிறுவனமான PhysicsWallah, (இது PW என்றும் அழைக்கப்படுகிறது) வெஸ்ட்பிரிட்ஜ் மற்றும் GSV வென்ச்சர்ஸ் ஆகியவற்றிலிருந்து சீரிஸ் A நிதிச் சுற்றில் 100 மில்லியன் டாலர்களை திரட்டி, இந்தியாவின் 101 வது யூனிகார்னாக மாறியுள்ளது.

டிஜிட்டல் கடன் வழங்கும் தளமான FlexiLoans, ஃபசினாரா கேபிட்டல், மாஜ் இன்வெஸ்ட் மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து 90 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. 

ஃபின்டெக் ஸ்டார்ட்அப் Kishsht, பிரொனி இன்வெஸ்ட் ஏஜென்சி, வெர்டிக்ஸ் குரோத், மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து $80 மில்லியன் திரட்டியுள்ளது.

மும்பையை சேர்ந்த ஆன்லைன் அழகுசாதன சில்லறை விற்பனையாளர் Purplle, சவுத் கொரியன் VC பராமார்க் வென்ச்சர்ஸ் தலைமையில் தற்போதுள்ள ஆதரவாளர்களான ப்ளூம் வென்ச்சர்ஸ், கேதாரா மற்றும் அசிம் பிரேம்ஜியின் பிரேம்ஜி இன்வெஸ்ட் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து 33 மில்லியன் டாலர்கள் திரட்டியுள்ளது. 

ஹைப்பர்லோகல் ஷார்ட் நியூஸ் அப்ளிகேஷன் Way2News வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் மற்றும் துணிகர முதலீட்டாளர் சஷி ரெட்டியிடம் இருந்து $16.75 மில்லியன் திரட்டியது.

பெஸ்ஸெமர் வென்ச்சர் பார்ட்னர்ஸ், டாங்லின் வென்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் லைட்ஸ்பீட் இந்தியா பார்ட்னர்ஸ் ஆகியவற்றிலிருந்து பெப்பர் கன்டென்ட் $14.3 மில்லியன் திரட்டியுள்ளது.

இன்வெஸ்மெண்ட் பிளாட்ஃபார்ம் Jiraaf, ஆக்செல் பார்ட்னர்ஸ், மன்கேகர் ஃபேமலி ஆஃபிஸ், ஆஸ்பயர் ஃபேமலி ஆஃபிஸ் மற்றும் பிற ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து $7.5 மில்லியன் திரட்டியது.

ப்ராப்டெக் ஸ்டார்ட்அப் Ivy Homes, கோஸ்லா வென்ச்சர்ஸ், வென்ச்சர் ஹைவே, ஒய் காம்பினேட்டர், ஜிஎஃப்சி மற்றும் பலவற்றிலிருந்து ஈக்விட்டி மற்றும் கடன் ஆகியவற்றின் கலவையில் $7 மில்லியனை திரட்டியது. 

வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தங்கள் (Undisclosed deals): கருடா ஏரோஸ்பேஸ், ஹவுஸ் ஆஃப் பிராண்ட்ஸ் நிறுவனம், MoneyyApp, The June Shop, Zaara Biotech மற்றும் EduGorilla ஆகிய நிறுவனங்கள் தங்களது நிதி விவரங்களை வெளியிடவில்லை. 

இந்த வார Acquisitions:

இந்த வாரத்தில் 31 நிறுவனங்களின் நிதி திரட்டல்களை தவிர, இரண்டு கையகப்படுத்தல்களும் (acquisitions) காணப்பட்டன. அந்த வகையில், ப்ரிஸ்டின் நிறுவனம் கேர் ஹெல்த்டெக் ஸ்டார்ட்அப்பான லைப்ரேட் -வையும், பெட்டர்பிளேஸ் நிறுவனம் ஈஸிடாக்ஸ் -வையும் வாங்கியுள்ளன. இதன் மதிப்பு வெளியிடவில்லை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


Alakh Pandey Success Story: அன்று ரூ.75 கோடி சம்பளத்தை நிராகரித்து... இன்று பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரர் ஆன அலக் பாண்டே...!! யார் இவர்?


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்