Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Invact Metaversity Startup: இந்தியாவில் ரொம்ப பிரபலமான கம்பெனிய இழுத்து மூடப்போறாங்களாம்.....!! 

Nandhinipriya Ganeshan May 25, 2022 & 14:10 [IST]
Invact Metaversity Startup: இந்தியாவில் ரொம்ப பிரபலமான கம்பெனிய இழுத்து மூடப்போறாங்களாம்.....!! Representative Image.

Invact Metaversity Startup: முன்னாள் ட்விட்டர் இந்தியாவின் தலைவர் மனீஷ் மகேஸ்வரி மற்றும் முன்னாள் மைக்ரோசாப்ட் மூத்த பொறியாளர் தனய் பிரதாப் ஆகியோரால் நிறுவப்பட்ட மிகவும் பிரபலமான எட்டெக் ஸ்டார்ட்அப் மெட்டாவர்ஸ் ஹைப்ரிட் (Edtech Startup Invact Metaversity). தற்போது எட்டெக் துறையில் கடும் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், இந்நிறுவனத்தின் தலைவர் தனது நிறுவனத்தை மூட உள்ளதாகவும் அல்லது மற்றொரு இணை நிறுவனரிடம் விடப்பட உள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

விதை நிதி:

கடந்து பிப்ரவரி மாதம் தான் இன்வாக்ட் மெட்டாவெர்சிட்டி ஸ்டார்ட்அப் $5 மில்லியன் விதை நிதியை திரட்டியது. பெங்களூருவை தளமாகக் கொண்ட Metaversity முதலீட்டாளர்கள், பயனர்கள் மற்றும் ஊடகங்களை ஈர்ப்பதற்கான அனைத்து சரியான பொருட்களையும் கொண்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மெட்டாவெர்சிட்டி, எட்டெக் மற்றும் வெப்3 போன்ற இரண்டு உலகங்களையும் கடந்து தனது பாதையில் கம்பீரமாக பயணித்து கொண்டிருந்தது. தொழில்நுட்பத்தை முதன்மைபடுத்தி புதிய அணுகுமுறையுடன் கூடிய ஆன்லைன் கல்வி நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் என்ன தவறு நடந்தது?

அவ்வளவு பெரிய தொகையை நிதியாக பெற்ற சில மாதங்களுக்கு பிறகு நிறுவனத்தின் திடுக்கடும் இந்த செய்தி பரபரப்பை (Invact Metaversity shut down) ஏற்படுத்தியுள்ளது. இதை பல நிறுவனர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன்படி, 70க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டிய நிதியில் செலவழிக்கப்படாத நிதியை மீண்டும் முதலீட்டாளர்களுக்கு டாலருக்கு 67 காசுகள் திருப்பி தரவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதேபோல், தனது முதல் குழுவிற்கு வகுப்பு கட்டணத்தையும் திருப்பி செலுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், நிறுவனம் வருங்கால "metaMBA" மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. 

எட்டெக் வீழ்ச்சி:

சில ஊழியர்கள் இரண்டு மாத பணிநீக்கத்துடன் விடுவிக்கப்பட்டனர். இந்த கடும் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பது தெளிவாக தெரிவில்லை. ஒருவகையில், கொரோனா தொற்றினால் ஒருபுறம் மக்கள் அவதிபட்டு வந்தாலும், மறுபுறம் இந்திய தொழில்துறையில் பெரும் உச்சத்தை அடைந்து வந்தது. ஆனால், மீண்டும் பழைய நிலைக்கு மாணவர்கள் படிக்க சென்றுவிட்டதால், டெக் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டு, ஏராளமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்வதோடு, இன்னும் சில நிறுவனங்கள் கம்பெனியையே மூடும் நிலைக்கு வந்துவிட்டது. இது உண்மையில் பெரும் வீழ்ச்சி தான். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்