Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Startup News Today: ShopSe சீரிஸ் A சுற்றில் 6 மில்லியன் டாலர் நிதியை திரட்டியுள்ளது...!!

Nandhinipriya Ganeshan May 24, 2022 & 19:40 [IST]
Startup News Today: ShopSe சீரிஸ் A சுற்றில் 6 மில்லியன் டாலர் நிதியை திரட்டியுள்ளது...!!Representative Image.

India startup news: ஃபின்டெக் தளமான ShopSe ஐ இயக்கும் Newbazaar Technologies என்ற நிறுவனம் White Venture Capital, Chiratae Ventures, BeeNext ஆகியவற்றில் இருந்து சீரிஸ் A சுற்றில் $ 6.1 மில்லியன் நிதியை திரட்டியுள்ளது. 

ShopSe Funding:

இந்த நிதி இந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் மேலும் 150,000 சில்லறை விற்பனையாளர்களைச் சேர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 45 மில்லியனுக்கும் அதிகமான இந்திய நுகர்வோருக்கு வசதியான மலிவு விலையில் கடன் வழங்குபவரின் கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கும், இயங்குதள திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கும் இந்த நிதியின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

ShopSe ஸ்டார்ட்அப்:

யக்னேஷ் தேசாய், பல்லவ் ஜெயின் மற்றும் அபிஷேக் நிமோன்கர் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஃபின்டெக் ஸ்டார்ட்அப் தான் ShopSe - உடனடி EMI தளமாகும். இந்நிறுவனம் வாங்கும் இடத்தில் மக்கள் எளிதாகவும் எந்த கட்டணமும் இல்லாமல் தவணைகளில் பணம் செலுத்த அனுமதிக்கிறது. மேலும், நிகழ்நேர கடன் தகுதியை டிஜிட்டல் முறையில் ஆய்வு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உடனடி டிஜிட்டல் கடன் தீர்வுகளை வழங்கி வருகிறது.

2021 ஆம் ஆண்டு, ஆரம்ப நிலை துணிகர மூலதன நிதிகளான சிராடே வென்ச்சர்ஸ் மற்றும் பீனெக்ஸ்ட் தலைமையிலான நிதிச் சுற்றில் ஷாப்சே $5.5 மில்லியன் திரட்டியது குறிப்பிடத்தக்கது.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்