Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Everything Mom Made: 49 வயதில் தூள் கலப்பும் ரிது பன்சாலி…! வெறும் 21,000 ரூபாயில் தொடங்கப்பட்ட பிசினஸ்.. இப்போ மாதம் 4.5 லட்சம் ரூபாய் வருமானம்…!

Gowthami Subramani [IST]
Everything Mom Made: 49 வயதில் தூள் கலப்பும் ரிது பன்சாலி…! வெறும் 21,000 ரூபாயில் தொடங்கப்பட்ட பிசினஸ்.. இப்போ மாதம் 4.5 லட்சம் ரூபாய் வருமானம்…!Representative Image.

Everything Mom Made: வேலை தேடி தேடி அலைந்து, பல பேர் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளைத் தேடி அலைகின்றனர். வயது தடையில்லை எனவும், வாழ்க்கையில் வெற்றி பெற இந்த ஒரு தொழில் மட்டும் இல்லை எனவும் நிரூபித்தவர் பல பேர். கூகுள் அறிவித்த அறிவிப்பின் படி, தற்போது கூகுளில் வேலை தேடுபவர்களை விட, சொந்தத் தொழில் எப்படி தொடங்கலாம் என தேடுபவரே அதிகமாக இருக்கிறார்களாம். தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என ஏராளக்கணக்கானோர் நினைக்கின்றனர்.

அம்மா மகள்களின் வணிகம்

A picture containing text

Description automatically generated

குடும்ப சூழ்நிலைக்காக சிலர் தொழில் தொடங்கலாம் என நினைப்பர். சிலர், வேலைக்குச் செல்லலாம் என நினைப்பர். இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்று குழம்பி சில பேர் இருப்பர். அவ்வாறு, இருப்பவர்களுக்கு மத்தியில் தொழில் செய்தால் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவர், ஜெய்பூரினைச் சேர்ந்த ரிது பன்சாலி என்பவர். இவர் தனது மகள்களான திவா மற்றும் தியா ஆகியோருடன் சேர்ந்து வணிகம் செய்து வருகிறார்.

எவரிதிங் மாம் மேடு (Everything Mom Made)

A picture containing text, beverage

Description automatically generated

எவரிதிங் மாம் மேடு என்பது நிறுவனத்தின் பெயர். கடந்த 28 ஆண்டுகளாக இல்லத்தரசியாக இருந்து, தற்போது 49 வயதில் சாதித்து வருகிறார். ரித்து பன்சாலி, திவா, மற்றும் ஆகியோர் இயற்கையான ஹேர் கேர் மற்றும் ஸ்கின் கேர் பொருள்களைத் தயாரித்து வருகின்றனர். இதனை இன்ஸ்டாகிராம் மூலம் எவரிதிங் மாம் மேடு என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்து வருகின்றனர்.

4 லட்சத்துக்கும் அதிகமான

A picture containing text

Description automatically generated

கடந்த 2020-ல் ஆகஸ்ட் மாதம், இவர்கள் வணிகத்தை தொடங்கியுள்ளனர். இந்த வணிகம் தொடங்குவதற்கு 21,000 ரூபாய் மட்டுமே செலவு செய்தனர். தற்போது, மாதந்தோறும் சுமார் ரூ.4.5 லட்சம் வருவாயினை ஈட்டி வருகின்றனர்.

இன்று பெரும்பாலானோர், இம்மாதிரியான அலங்காரப்பொருள்கள் வகையிலான தொழில்களில் இறங்கி சாதித்து வருகின்றனர். இது பலரின் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்குமாறு அமைகிறது.

எங்கள் வணிகத்திற்கான ஊக்கம்

A group of women posing for a picture

Description automatically generated with medium confidence

வாழ்வில் சாதித்த ஒவ்வொருவருக்கும் பின்னால், எதாவதொரு ஊக்கம் இருந்து தான் வரும். அந்த வகையில், தற்போது ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த வேலையின் அடிப்படையில் தொழில்களைத் தொடங்கி அதில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இது குறித்து, ரிது பன்சாலி அவர்கள் குறிப்பிட்டதாவது, “தோல் மற்றும் முடி பராமரிப்பிற்காக பல்வேறு வீட்டு வைத்தியங்களை நான் செய்வேன். இதை ஏன் தொழிலாக மாற்றக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. இதற்கிடையில் எனது மகள்கள் எவரிதிங் மாம் மேடு என்ற பெயரில் வணிகத்தைத் தொடங்க ஊக்கப்படுத்தினார்கள்.

இயற்கை பொருள்கள்

A picture containing text, plant, pickle

Description automatically generated

கூந்தல் மற்றும் முகத்திற்கு, வீட்டு வைத்தியங்களே மிகச் சிறந்த பலன்களைத் தரும் எனக் கூறுகின்றனர். அதன் படி, கெமிக்கல் எதையும் பயன்படுத்தாமல், இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தியே இது செய்யப்படுகின்றன. இது பலரும் எதிர்பார்க்கக் கூடிய வகையில் அமைந்தது.

கடினமாக தொடங்கினோம்

இந்த தொழில் தொடங்குவது முதலில் எங்களுக்கு கடினமாக இருந்தது. இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை ஓபன் செய்து, அதில் தினசரி பயன்படுத்தக் கூடிய பொருள்களைப் பகிரத் தொடங்கினோம். இது போன்ற ஸ்பெஷல் தயாரிப்புகள் மற்றவர்களாலும் கவரப்பட்டு அதற்காக பல ஆர்டர்கள் கிடைத்தன.

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை

வணிகத்தில் முழுக்க முழுக்க நமக்கு தேவையாய் இருப்பது நம்பிக்கை தான். மேலும், எனக்கு வணிகம் தொடங்குவதற்கான நிதி சுதந்திரமும் கிடைத்தது. மகள்களின் உதவியால் என்னால் இந்த அளவிற்கு உயர முடிந்தது என்று கூறினார் ரிது பன்சாலி. எவ்வளவு கடினமான சூழ்நிலை வந்தாலும், தன்னம்பிக்கையை தளர விடாது முயற்சித்தால் எல்லோரும் வெற்றி பெறுவது நிச்சயம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்