Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

48 வயதில் ரூ.1.4 கோடி வருமானம்..! ஸ்னாக்ஸ் விற்பனையின் அசத்தும் கீதா…!

Gowthami Subramani July 13, 2022 & 12:31 [IST]
48 வயதில் ரூ.1.4 கோடி வருமானம்..! ஸ்னாக்ஸ் விற்பனையின் அசத்தும் கீதா…!Representative Image.

எப்படி வருமானம் ஈட்டுவதென்று தெரியாமல் இருப்பவர்களுக்கு மத்தியில் தனக்கு தெரிந்த தொழிலில் நல்ல வருமானம் ஈட்டும் நபர்களே அதிகம். தொழில் தொடங்க நம்மிடம் முக்கியமாக இருப்பது தன்னம்பிக்கை மட்டுமே. அப்போ வயது..? வயது தடையா இருக்குமென்று நினைக்கிறீங்களா..? கண்டிப்பாக இல்லை. அதற்கு உதாரணமாக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் ஸ்னாக்ஸ் விற்பனை செய்து கோடி அளவிலான வருமானத்தை ஈட்டுகிறார். ஒருவர் எந்த வயதில் தொழில் தொடங்குகிறார் என்பது முக்கியமல்ல. அவரின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே காரணமாக அமையும்.

அண்டை நாடுகள் ஆதிக்கம்

சமீபத்தில் வெளிவந்த ஆய்வறிக்கையின் படி, நமது உள்ளூர் ஸ்னாக்ஸ்-ஐ விட வெளிநாட்டு ஸ்னாக்ஸ் அதிக அளவில் மக்களால் விரும்பப்படுவதாகவும், நமது நாட்டின் ஸ்னாக்ஸ்களுக்கான மதிப்பு குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்டை நாடுகளின் ஸ்னாக்ஸ் எப்படிப்பட்ட சுவையில் இருப்பினும், நமது நாட்டின் சுவையே வேறு தானே..! இதை எல்லோருக்கும் நிரூபிக்கும் விதமாக, பாட்டீல் காக்கி உள்ளது.

பாட்டீல் காக்கி தொடக்கம்

A person smiling at the camera

Description automatically generated with low confidence

மகாராஷ்டிராவைச் சேர்ந்த கீதா பாட்டீல் என்பவர், அந்த பகுதியின் உணவுகளை விற்பதற்காக மும்பை மற்றும் பூனே முழுவதும் சேரும் வகையில் பாட்டீல் காக்கியைத் தொடங்கினார். ஆரம்பத்தில் தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக செய்த வேலையை, இவர் தொழிலாகவே மாற்றி நிறைய லாபத்தை ஈட்டினார். அவ்வாறே, ஒவ்வொரு மாதம் ஆயிரக்கணக்கான ஆர்டர்களை விற்பனை செய்வதுடன், ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வருமானமும் ஈட்டி வருகிறார்.

விதவிதமாக மற்றும் வித்தியாசமாக

A picture containing indoor

Description automatically generated

இந்த வினித் பாட்டீல் பள்ளி படிக்கும் போது, அவரது தாயார் கீதா பாட்டீல் செய்து கொடுக்கும் திண்பண்டங்களைப் பள்ளிக்கு எடுத்துச் செல்வார். இந்த அருமையான சுவை மிகுந்த திண்பண்டங்கள் அனைவரையும் கவர்ந்தது. இவரது பள்ளி பருவத்தில் அவரது நண்பர்கள் மதிய உணவிற்காக ரொட்டி அல்லது சப்ஜியைக் கொண்டு வருவார்களாம். ஆனால், இவரின் மதிய உணவு பராத்தா மாவில் வித்தியாசமாக சமோசா வடிவில் காய்கறிகளை வைத்து சமைத்துத் தருவார். அது மிகவும் சுவையாக இருக்கும்.

சிறு வயதில் இருந்தே

A picture containing several

Description automatically generated

சாதித்த ஒவ்வொருவரும் சிறு வயது முதலே சிறிய அனுபவம் பெற்று தான் வருகின்றனர். ஆனால், அனுபவம் இல்லாமலும் இதனைச் செய்ய முடியும். கீதா சிறுவயதில் தனது தாயார் தினசரி 20 பேருக்கு சமையல் செய்து கொடுத்து வந்ததை பார்த்து வளர்ந்துள்ளார். அந்த சமயத்தில், தாயாருக்கு உதவியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

முதலில் சிறிய அளவில்

இந்த அனுபவங்களைக் கொண்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தின்பண்டங்கள், இனிப்புகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். முதலில் சாதாரணமாக தொடங்கப்பட்டாலும், இன்று 3,000 பேருக்கும் மேலானோர் சேவை செய்து வருகின்றனர். இதன் மூலம், ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் ஈட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.

சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை

A group of women sitting at a table

Description automatically generated with low confidence

 

இவை அனைத்திற்கும் மேலாக, நிரந்தர வாடிக்கையாளர்கள் தளம் இருப்பதால், இதைப் பயன்படுத்தி வணிகம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால், எங்களால் இந்த நிலையை அடைய முடிந்தது எனக் கூறுகின்றனர்.

வணிகத்தின் முன்னேற்றம்

இவ்வாறு குடும்ப சூழ்நிலைக்காக சிறிய கிட்சனில் தொடங்கிய வணிகம், சரியான பிராண்டிங் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம், எவ்வளவு வருமானங்கள் ஈட்டப்பட்டன என்பது கூட தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் வணிகத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகரிந்த முற்பட்டதாக கூறினர். அதன் படி, பிராண்டிங், மார்க்கெட்டிங் உள்ளிட்டவற்றை தெரிந்து கொண்டு அதனை நோக்கி பயணித்தோம். இதற்கிடையில் பாட்டீல் காக்கி என்ற பெயரை கொண்டு வந்தோம். இவ்வாறே இதன் வணிகத்தை விரிவுபடுத்தி, ஆண்டுக்கும் 12 லட்சம் வருவாய் என்ற நிலையில் இருந்து, கிட்டத்தட்ட 1.4 கோடி ரூபாயாக உயர்த்தியதாகக் கூறினர்.

எந்த வயதிலும், தளராத நம்பிக்கையும், தொழில் செய்ய வேண்டும் என்ற உத்வேகமும் இருந்தால், எவராலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் கீதாவின் இந்தப் பயணம் அமைகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்