Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி ஃபிளிப்கார்ட் ஆப் மூலமே ஹோட்டல் புக்கிங் பண்ணிக்கலாம்.. புதிய சேவை அறிமுகம்..!!

Nandhinipriya Ganeshan September 07, 2022 & 12:20 [IST]
இனி ஃபிளிப்கார்ட் ஆப் மூலமே ஹோட்டல் புக்கிங் பண்ணிக்கலாம்.. புதிய சேவை அறிமுகம்..!!Representative Image.

இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட், ஏற்கனவே விமான முன்பதிவு சேவையை வழங்கி வருகிறது. இதற்கிடையில், தற்போது 3 லட்சம் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்துக்கொள்ளும் வசதியை அதன் புதிய அம்சமான "ஃபிளிப்கார்ட் ஹோட்டல்" மூலம் ஹோட்டல் முன்பதிவிலும் இறங்கியுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப ஹோட்டல் முன்பதிவுகளை செய்துக்கொள்ள இயலும். மேலும், இஎம்ஐ விருப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்வதை சிரமமின்றி செய்ய, நிறுவனம் அதன் ஆன்லைன் ஷாப்பிங் செயலியில் இந்த அம்சத்தை இணைத்துள்ளது. 

எனவே, வாடிக்கையாளர் எளிதாக ஃபிளிப்கார்ட் ஆப்பை பயன்படுத்தி நாட்டில் எந்த இடத்திலும் ஹோட்டல்களை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். ஃபேஷன் மற்றும் ஆன்லைன் ரீடெய்ல் ஈகாமர்ஸ் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஹோட்டல்-புக்கிங் அம்சத்தின் மூலம் மேலும் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்