Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

500 பேர் திடீர் பணிநீக்கம்... டெக் ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த ஓலா...

Nandhinipriya Ganeshan September 19, 2022 & 11:45 [IST]
500 பேர் திடீர் பணிநீக்கம்... டெக் ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த ஓலா...Representative Image.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறி வருகின்றனர். இதை நம்பி பெரிய முதலீட்டு உடன் களத்தில் இறங்கிய ஓலா தற்போது பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில், ஆன்லைன் டாக்சி புக்கிங் சேவை அளித்து வந்த ஓலா நிறுவனம், தற்போது தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கி எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இறங்கியது. எல்லாம் ஒரு அளவு சென்று கொண்டு இருக்கும் நேரத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்து மற்றும் முன்னணி இரு சக்கர நிறுவனங்கள் இத்துறையில் வருகை ஆகியவை ஓலா நிறுவனத்தின் ஓட்டத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது.

Ola S1 electric scooter premiers with high speed, low price and huge tech

உயர் அதிகாரிகள் இராஜினாமா

இதன் விளைவு 500 ஊழியர்களின் பணிநீக்கம். ஓலா நிறுவனம் இந்த வருடம் ஆரம்பத்தில் இருந்தே பல பிரிவுகளில் இருந்து பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதனால் வெறுப்பான பல உயர் அதிகாரிகள் (30 உயர் அதிகாரிகள்) தங்களுடைய பணியை இராஜினாமா செய்துவிட்டு வெளியேறிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Major Layoffs. And what can we learn from them | by Beril Kocadereli | The  Startup | Medium

500 பேர் திடீர் பணிநீக்கம்

2022 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து செய்யப்பட்ட பணிநீக்கம் அனைத்தும் ஓலா எலக்ட்ரிக் பிரிவு ஊழியர்களாகும். ஆனால், தற்போது ஓலா மலைபோல நம்பியிருந்த டெக் துறையில் கைவைத்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஏற்பட்ட சரிவால், ஓலா தனது ஆஸ்தானா நிறுவனமான ANI டெக்னாலஜிஸ் நிறுவனத்திலிருந்து 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், மென்பொருள் பிரிவுகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மத்தியில் இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Ola To Lay Off At Least 500 Employees Across Software Teams

5000 ஊழியர்களுக்கு வேலை

இருப்பினும், இன்னும் 18 மாதத்தில் இன்ஜினியரிங் பிரிவில் 5000 ஊழியர்களை பணியில் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளதாக ஓலா நிர்வாகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்