Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தன்னம்பிக்கையுடன் முயன்று வேலையிழந்த இரண்டே வருடத்தில் 10 கோடி சம்பாதித்து சாதனை..!

Gowthami Subramani July 27, 2022 & 17:55 [IST]
தன்னம்பிக்கையுடன் முயன்று வேலையிழந்த இரண்டே வருடத்தில் 10 கோடி சம்பாதித்து சாதனை..!Representative Image.

நாட்டில் வேலையில்லாமல் போனது, பொருளாதாரம் ரீதியான பாதிப்பு உள்ளிட்டவற்றை வரும் என யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அந்த சமயத்தில், ஏராளக்கணக்கானோர் வேலையில்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இப்படி பொருளாதார பிரச்சனை வந்த இந்த நேரத்தில், இரு நண்பர்கள் வேலை இழந்து மிகவும் சிரமப்பட்டு இறுதியில் புதிய தொழில் ஒன்று தொடங்கி இரண்டே வருடத்தில் ரூபாய் 10 கோடி சம்பாதித்து சாதனை படைத்துள்ளனர்.

ஊரடங்கில் வேலையின்மை

யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா காலத்தில் வந்த ஊரடங்கால், பெரும் பொருளாதார நெருக்கடி வந்தது. இதனால், அனைவரும் பெரிதளவு பாதிக்கப்பட்டனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் வேலையை இழந்த இரு நண்பர்கள் மிகுந்த சிரமப்பட்டு புதிதாக தொழில் தொடங்கினர். இவ்வாறு தொடங்கி இரண்டு வருடத்தில் எப்படி 10 கோடி ரூபாய் சம்பாதித்தார்கள் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஸ்டார்ட் அப்

புதிதாக நிறுவனத்தை தொடங்கி, அதில் லட்சம், கோடி என வெவ்வேறு துறைகளில் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையிலேயே இவர்களும், வணிகம் தொடர்பான புத்தகங்களைப் படித்ததால், சொந்த தொழில் குறித்த ஒரு நுட்ப அறிவைப் பெற்றனர். மேலும், அவர்கள் உள்ளூர் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இறைச்சி மற்றும் கோழிப்பதப்படுத்துதல் தொடர்பான தொழில்பயிற்சி வகுப்பு ஒன்றில் சேர்ந்தனர்.

இவர்கள், நுகர்வோர்களுக்கு தேவையான இறைச்சியை நம்பகமாகவும், சலுகை முறையிலும் வழங்க முடிவு செய்தனர். ஆனால், ஆரம்பத்தில் இவர்களுக்கு குடும்பத்தினரிடமிருந்து முழு ஆதரவும் பெறப்படவில்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற தொடங்கியவுடன் அவர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் இந்த தொழில் செய்வதால் எங்களை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என எங்கள் குடும்பத்தினர்கள் நினைத்து விட்டனர்.

மூன்றே ஆண்டுகளில் 100 கடைகள்

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, 10 லாபம் அதிகரித்த பின், கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதன் படி, மேலும் 100 கடைகள் அதிகரித்ததால் அதற்கான திட்டங்களையும் உருவாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதனை ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து நல்ல லாபத்தை ஈட்டி வருகின்றனர். ஊரடங்கில் வேலையிழந்து, தன்னம்பிக்கையைத் தளர விடாது கோடி கணக்கில் வருமானம் ஈட்டும் வணிகத்தைத் தொடங்கி சாதித்துள்ளனர்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்