Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Google Investment In Indian Startup: இந்திய ஸ்டார்ட்அப்பில் முதலீடு செஞ்சிருக்கும் கூகுள்... எதுல தெரியுமா?

Nandhinipriya Ganeshan June 28, 2022 & 10:45 [IST]
Google Investment In Indian Startup: இந்திய ஸ்டார்ட்அப்பில் முதலீடு செஞ்சிருக்கும் கூகுள்... எதுல தெரியுமா?Representative Image.

Progcap Funding: புது டெல்லியை சேர்ந்த கார்ப்பரேட் ஃபைனான்சிங் ஸ்டார்ட்அப் புரோக்கேப், இன்று கிரியேஷன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் மற்றும் டைகர் குளோபல் உள்ளிட்ட முதலீட்டாளர்களிடமிருந்து சீரிஸ் C சுற்றில் 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியுள்ளது. மேலும், தற்போதைய முதலீட்டாளரான Sequoia Capital India வும் இந்த நிதிச்சுற்றில் பங்கேற்றது. அதுமட்டுமல்லாமல், புரோக்கேப் நிறுவனத்தின் புதிய முதலீட்டாளராக மீடியா ஜாம்பவான் கூகுளும் இணைந்துள்ளது. 

புரோக்கேப்பின் நிகர மதிப்பு:

இதற்கு முன்னதாக, இந்த ஸ்டார்ட்அப் டைகர் குளோபல் மற்றும் கிரியேஷன் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்திடமிருந்து 30 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கடந்த 12 மாதங்களில் மட்டும் ஸ்டார்ட்அப் ஏறக்குறைய $100 மில்லியன் நிதி திரட்டியிருக்கிறது. இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு இப்போது $600 மில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும், திரட்டப்பட்ட நிதியை அதன் விரிவாக்கத்தை ஆதரிக்கவும், தயாரிப்பு வளர்ச்சியை துரிதப்படுத்தவும் பயன்படுத்த உள்ளதாக ஸ்டார்ட்அப் தெரிவித்துள்ளது. 

புரோக்கேப் என்றால் என்ன?

பல்லவி ஸ்ரீவஸ்தவா மற்றும் ஹிமான்ஷு சந்திரா ஆகியோரால் நிறுவப்பட்ட ப்ரோக்கேப் ஒரு நிதி தொழில்நுட்ப தளமாகும் (financial technology platform). இது இந்தியாவில் உள்ள குறைந்த அடுக்கு நகரங்களில் உள்ள சில்லறை விற்பனையாளர்களுக்கு அவர்களின் வணிக வளர்ச்சித் தேவைகளுடன் பொருந்தக்கூடிய நெகிழ்வான, விரைவான கடன்களை வழங்கிவருகிறது. இதன் மூலம் அவர்களின் லாபத்தை அதிகரிக்கவும், பணப்புழக்கத்தை நிர்வகிக்கவும், அவர்களின் பிசினஸை விரிவுபடுத்தவும் உதவுகிறது. 

நிதி திரட்டல் பற்றி இணை நிறுவனர்...

இந்த இன்வெஸ்ட்மெண்ட் குறித்து பேசிய ப்ரோக்கேப்பின் இணை நிறுவனர் பல்லவி ஸ்ரீவஸ்தவா, "எங்களுடைய தற்போதைய முதலீட்டாளர்கள் ப்ரோக்கேப்பில் தங்களுடைய நம்பிக்கையை தொடர்ந்து அழப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இந்த பயணத்தில் கூகுள் எங்களுடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகவும் ஊக்கமளித்துள்ளதாகவும்" தெரிவித்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்