Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

[Funding Alert] விதை நிதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் sexual wellness ஸ்டார்ட்அப்...!!

Nandhinipriya Ganeshan September 01, 2022 & 16:20 [IST]
[Funding Alert] விதை நிதி பெற்றுள்ள இந்தியாவின் முதல் sexual wellness ஸ்டார்ட்அப்...!!Representative Image.

மும்பையை சேர்ந்த டி2சி ஸ்டார்ட்அப்பான MyMuse, ஷாமா கேபிட்டல் தலைமையிலான விதைச்சுற்று நிதியில் $1.2 மில்லியனை (இந்திய மதிப்பில் 9.5 கோடி) பெற்றுள்ளது. மேலும், Sauce VC, Whiteboard Capital, Mohit, Malika Sadanni, Varun Sadana மற்றும் பல முதலீட்டாளர்களும் இந்த விதைச்சுற்றில் பங்கேற்றனர்.

இந்த நிதியின் மூலம் புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், விநியோகத்தை விரிவுப்படுத்தவும், நிறுவனத்தின் தரத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. MyMuse, பாலின நலனுக்காக (sexual wellness) அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பாலின-நடுநிலை பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

மசாஜர்ஸ், லூப்ரிகண்ட்ஸ், ஆயில், கிப்ஃட் கிட்ஸ், மற்றும் பலவிதமான பொருட்களை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 15,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த துறையில் (sexual wellness) பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியை காணவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்