Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஃபேஷன் ஃபேஷன்.. இந்தியாவிலும் இனி ஃபேஷன் கலைகட்டும்..!!

Nandhinipriya Ganeshan September 14, 2022 & 16:20 [IST]
ஃபேஷன் ஃபேஷன்.. இந்தியாவிலும் இனி ஃபேஷன் கலைகட்டும்..!!Representative Image.

பிரபல சொகுசு ஃபேஷன் ஸ்டார்ட்அப் நிறுவனமான பர்பிள் ஸ்டைல் லேப்ஸ் 'Purple Style Labs', வருவாய் அடிப்படையிலான ஃபைனான்ஸிங் தளமான க்ளப் (Klub) கிட்டயிருந்து ரூ.10 கோடியை நிதியாக பெற்றுள்ளது. 

மேலும், பெறப்பட்ட புதிய நிதியின் மூலம் தங்களது சேவையை இந்தியா முழுவதும் உள்ள புதிய நகரங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக பர்பிள் ஸ்டைல் ​​லேப்ஸின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

மும்பையை சேர்ந்த இந்த ஃபேஷன் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு அபிஷேக் அகர்வால் என்பவரால் ஒரு இ-காமர்ஸ் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. ஆனால், இப்போது மும்பை மற்றும் டெல்லியில் சில்லறை விற்பனை ஷாப்களை கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ஆடம்பர ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. மேலும், பெர்னியாவின் பாப்-அப் கடையை நடத்தும் பர்பிள் ஸ்டைல் ​​லேப்ஸ், அனிதா டோங்ரே, தருண் தஹிலியானி, ரிது குமார், ஃபல்குனி ஷேன் பீகாக் மற்றும் மசாபா உள்ளிட்ட 1,000 க்கும் மேற்பட்ட பிரபல டிசைனர்களின் ஆடைகளையும் கொண்டுள்ளது. 

இதே நிறுவனம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி ஏஞ்சல் முதலீட்டாளர் ஆகாஷ் பன்சாலி தலைமையிலான தொடர் பி சுற்றில் $10 மில்லியன் திரட்டியது. இந்த சுற்றில் மற்ற ஏஞ்சல் முதலீட்டாளர்களான நடிகர் மாதுரி தீட்சித் நேனே, ஆல்பா வேவ் குளோபலின் நவ்ரோஸ் உத்வாடியா, க்சாண்டர் குழுமத்தின் சித் யோக், பிரேம்ஜி இன்வெஸ்டின் ராகுல் கர்க், பரம் கேபிட்டலின் முகுல் அகர்வால், SMIFS இன் ராகுல் கயான், கிரிஷ் குல்கர்னி, சூயடிஜியோ அட்விஸ்ஸ் மற்றும் பிராண்ட் லேப்ஸ் இணை நிறுவனர் ரிஷி வாசுதேவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்