Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசுகளை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க...!!

Nandhinipriya Ganeshan August 20, 2022 & 14:00 [IST]
ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசுகளை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க...!!Representative Image.

Handloom Startup Grand Challenge: கைத்தறி துறையானது கிராமப்புற வாழ்வாரத்தின் மிகப்பெரிய  ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. கைத்தறி துணிகளில் அடையப்பட்ட கலைத்திறம் மற்றும் நுணிக்கத்தின் அளவு இணையற்றது. அதுமட்டுமல்லாமல், சில நெசவுகள்/வடிவமைப்புகளை இன்னமும் நவீன இயந்திரங்களுக்கு அப்பாற்பட்டவையாகவே உள்ளது.  கைத்தறி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 28.2 லட்சம் கைத்தறிகள் உள்ளன. நம் நாட்டின் வளமான கைத்தறி பாரம்பரியத்தைப் பாதுகாக்க, கைத்தறித் துறையில் நெசவாளர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக புதுமையான, செலவு குறைந்த கைத்தறிகள் தேவைப்படுகிறது.

அந்த வகையில், O/o டெவலப்மென்ட் கமிஷனர் மற்றும் ஜவுளி அமைச்சகம், ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து கைத்தறி கிராண்ட் சேலஞ்ச் 'Handloom Grand Challenge' -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, ஆர்வமுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மாணவ, மாணவிகள், மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இதில் பங்கேற்று சரியான தீர்வுகளை வழங்கி பல லட்சம் மதிப்புள்ள ரொக்க பரிசுகளை வெல்லலாம். 

சரியான தீர்வுகளை வழங்கும் முதல் 3 வெற்றியாளர்களுக்கு 1வது, 2வது, மற்றும் 3 வது பரிசு முறையே ரூ.3,00,000, ரூ.2,00,000 மற்றும் ரூ.1,00,000 வழங்கப்படும்.

நடுவர் குழு/நிபுணர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏதேனும் 3 ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.75,000 முறையே மூன்று ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். 

நடுவர் குழு/நிபுணர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களைத் தவிர மற்ற 3 பங்கேற்பாளர்களுக்கு ரூ.75,000 முறையே மூன்று ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.

குறிப்பு: ரொக்கப் பரிசுகள் நடுவரின் விருப்பப்படி மட்டுமே பகிரப்படும்.

கடைசி தேதி: செப்டம்பர் 07, 2022

விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

மேலும் பல விரிவான விபரங்களுக்கு Startup India போர்ட்டலை அணுகவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்