Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kissflow நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் 'PickMyAd' ஸ்டார்ட்அப்பில் முதலீடு...!!

Nandhinipriya Ganeshan August 18, 2022 & 19:46 [IST]
Kissflow நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் 'PickMyAd' ஸ்டார்ட்அப்பில் முதலீடு...!!Representative Image.

சென்னையை சேர்ந்த இணைய செல்வாக்காளர்கள் கண்டறிதல் மற்றும் பதிவு செய்யும் தளமான பிக்மைஆட் 'PickMyAd', Kissflow நிறுவனத்தின் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம் அவர்களிடம் இருந்து விதைக்கு முந்தைய சுற்றில் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுள்ளது. இது இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இரண்டாவது நிதி திரட்டலாகும். மேலும், இந்த சுற்றில் Ippopay சி.இ.ஓ மோகன்.கே, ஆம்வெல் விபி பிரசாந்த், M2P ஃபின்டெக்கின் இணை நிறுவனர் பிரபு ரங்கராஜன் மற்றும் இதர இந்திய மற்றும் அமெரிக்க ஏஞ்சல் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். 

பிரபு தாஸ், சிவகுமார் செல்வராஜ், அருண் பயஸ் மற்றும் அருள்ஜோதி குப்புசாமி ஆகிய நான்கு நண்பர்களால் நிறுவப்பட்ட 'பிக்மைஆட்' நிறுவனம் செல்வாக்காளர்களுடன் பிராண்ட்களை இணைத்து, அவர்களின் மார்க்கெட்டிங் பயணத்தை நிர்வகித்து வருகிறது. மேலும், அனைத்து அளவிலான பிராண்ட்களும் கிரியேட்டர்களுடன் தொடர்பு கொள்வதற்கு இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் உதவுகிறது. இந்த நிறுவனம் தற்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் உள்ல யூடியூப் மற்றும் இன்ஸ்டா கிரியேட்டர்களில் கவனம் செலுத்து வருகிறது. அதனடிப்படையில், 500 க்கும் மேற்பட்ட செல்வாக்காளர்களை கொண்டு, 100 க்கும் மேற்பட்ட டீல்களையும் பெற்றுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்