Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

India's 106th Unicorn: இந்தியாவின் 106வது யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற பிரபல லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப்..!!

Nandhinipriya Ganeshan August 22, 2022 & 12:30 [IST]
India's 106th Unicorn: இந்தியாவின் 106வது யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற பிரபல லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப்..!!Representative Image.

India's 106th Unicorn: Zomato ஆல் ஆதரிக்கப்படும் லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப்பான ஷிப்ரோக்கெட் 'Shiprocket', Temasek மற்றும் Lightrock India இணைந்து நடத்திய நிதி சுற்றில் $33.5 மில்லியனை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.270 கோடி) திரட்டியுள்ளது. மேலும், இந்த சுற்றில் தற்போதுள்ள முதலீட்டாளர்களான Huddle, March Capital, Moore Strategic Ventures, PayPal Ventures மற்றும் Bertelsmann India Investments ஆகியோரும் பங்கேற்றனர். இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு $1.2 பில்லியனை தொட்டுள்ளது. இதனடிப்படையில், ஷிப்ரோக்கெட் இந்தியாவின் 106 வது யூனிகார்ன் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டு சாஹில் கோயல், விஷேஷ் குரானா, கௌதம் கபூர் மற்றும் அக்‌ஷய் குலாட்டி ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த ஸ்டார்ட்அப், இப்போது ஆண்டுதோறும் 70 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. 

Also Read: இந்தியாவின் 105வது யூனிகார்ன் ஸ்டார்ட்அப்..

ஷிப்ரோக்கெட் நிறுவனத்தால் வாங்கப்பட்ட சமீபத்திய பங்குகள்:

கடந்த மாதம் அரவிந்த் இன்டர்நெட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான தொழில்நுட்ப நிறுவனமான ஓமுனி 'Omuni', ஷிப்ரோக்கெட் நிறுவனத்தால் ரூ.200 கோடிக்கு பங்கு மற்றும் பணமாக வாங்கப்பட்டது. 

அதேப்போல், கடந்த ஜூன் மாதம் D2C பிராண்டுகள் மற்றும் SME இ-டெய்லர்களுக்கான e-commerce software-as-a-service (SaaS) தளமான Pickrr -ஐ, சுமார் $200 மில்லியனுக்கு (கிட்டத்தட்ட ரூ. 1,560 கோடி) வாங்கியது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்