Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Finbox Fund Raise: இந்திய ஃபின்டெக் நிறுவனம் முதல் முறையாக இத்தன கோடியை திரட்டியுள்ளது...!!

Nandhinipriya Ganeshan June 20, 2022 & 16:45 [IST]
Finbox Fund Raise: இந்திய ஃபின்டெக் நிறுவனம் முதல் முறையாக இத்தன கோடியை திரட்டியுள்ளது...!!Representative Image.

Finbox Fund Raise: பெங்களூரை சேர்ந்த B2B ஃபின்டெக் SaaS ஸ்டார்ட்அப் ஃபின்பாக்ஸ், ஏ91 பார்ட்னர்ஸ் தலைமையிலான நிதிச் சுற்றில் முதன்முதலாக $15 Mn (ரூ. 115 கோடி) திரட்டியுள்ளது. மேலும், இந்த நிதியுதவி சுற்றில் ஆதித்யா பிர்லா வென்ச்சர்ஸ் மற்றும் ஃபிளிப்கார்ட் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும், தற்போதுள்ள முதலீட்டாளர்களான அராலி வென்ச்சர்ஸுடன் இணைந்து பங்கேற்றன. தற்போது இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு 60 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

திரட்டப்பட்ட இந்த நிதியை ஸ்டார்ட்அப் செயல்பாடுகள் மற்றும் சலுகைகளை அதிகரிக்கவும் மற்றும் தென்கிழக்கு ஆசிய சந்தைக்கு விரிவுபடுத்தவும் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த திட்டங்களை செயல்படுத்த அதன் தற்போதைய பணியாளர்களை இரட்டிப்பாக்கவும் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. 

ஃபின்டெக் ஸ்டார்ட்அப்பான FinBox 2017 ஆம் ஆண்டு ரஜத் தேஷ்பாண்டே, ஆனந்த் தேஷ்பாண்டே, ஸ்ரீஜன் நகர் மற்றும் நிகில் பாவ்சின்கா ஆகியோரால்  நிறுவப்பட்டது. FinBox இன் B2B கிரெடிட் தனிநபர் கடன்கள், செயல்பாட்டு மூலதனக் கடன்கள், இன்வாய்ஸ் ஃபைனான்சிங், பை நவ், பே லேட்டர் போன்ற டிஜிட்டல் நிதித் தயாரிப்புகளைத் தொடங்க ஃபின்டெக் மற்றும் ஃபின்டெக் அல்லாத தளங்களைச் செயல்படுத்தி வருகிறது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்