Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Funding Galore: இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [ ஜூன் 13 - ஜூன் 18]....

Nandhinipriya Ganeshan June 19, 2022 & 16:30 [IST]
Weekly Funding Galore: இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [ ஜூன் 13 - ஜூன் 18]....Representative Image.

Weekly Funding Galore: இந்த வாரம், 38 இந்திய ஸ்டார்ட்அப்கள் நிதி திரட்டியுள்ளன. அதில் 37 நிறுவனங்கள் மொத்தம் சுமார் $906.44 மில்லியன் பெற்றுள்ளன. ஷேர்சாட் மற்றும் அப்கிராட் ஆகியவை முறையே 520 மில்லியன் டாலர்களை மற்றும் 225 மில்லியன் டாலர்களை திரட்டி நிதியுதவி பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. கடந்த வாரத்தை பொறுத்த வரை மொத்தம் 37 உள்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 600.38 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதியை திரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வாரத்தின் ஒப்பந்தங்கள்:

சமூக ஊடக நிறுவனமான ஷேர்சாட், கூகுள், டைம்ஸ் குழுமம் மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து 520 மில்லியன் டாலர்கள் திரட்டியது. 

ரோனி ஸ்க்ரூவாலாவின் அப்கிரேட், ஜேம்ஸ் முர்டோக்கின் லூபா சிஸ்டம்ஸ் எல்எல்சி மற்றும் எஜுகேஷனல் டெஸ்டிங் சர்வீஸ் (ETS) ஆகியவற்றிலிருந்து 225 மில்லியன் நிதியை திரட்டியுள்ளது. 

B2B கட்டுமான யூனிகார்ன் Infra.Market லிக்விடிட்டி குழுமத்தின் MARS யூனிகார்ன் நிதியிலிருந்து $50 மில்லியன் வளர்ச்சி மூலதனத்தை திரட்டியது.

D2C பிராண்ட் அக்ரிகேட்டர் G.O.A.T பிராண்ட் லேப்ஸ், Winter Capital, 9Unicorns, Venture Catalysts, Vivriti Capital மற்றும் Oxyzo ஆகியவற்றில் இருந்து $50 மில்லியனை திரட்டியது.

Groyyo, ஒரு B2B ஸ்டார்ட்அப், டைகர் குளோபல் மற்றும் ஆல்ஃபா வேவ் குளோபல் நிறுவனத்திடமிருந்து ஈக்விட்டி மற்றும் கடனின் கலவையில் $40 மில்லியனை திரட்டியது.

நோ-கோட் மொபைல் ஆப் பில்டிங் பிளாட்ஃபார்ம் ப்ளோபல் ஆப்ஸ் எலிவேஷன் கேபிடல் மற்றும் பெஸ்ஸெமர் வென்ச்சர் பார்ட்னர்களிடமிருந்து $8.5 மில்லியன் திரட்டியுள்ளது.

வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தங்கள் (Undisclosed deals): இதற்கிடையில், மொத்த நிதியுதவி பெற்ற தொடக்க நிறுவனங்களில் Plutoverse நிறுவனம் மட்டும் தனது நிதி விவரத்தை வெளியிடவில்லை.

இந்த வார Acquisitions:

இந்த வாரத்தில் 37 நிறுவனங்களின் நிதி திரட்டல்களை தவிர, நான்கு கையகப்படுத்தல்களும் (acquisitions) காணப்பட்டன. அந்த வகையில், கிளவர்டாப் நிறுவனம் கஸ்டமர் என்கேஜ்மெண்ட் தளமான Leanplum -யும், Shiprocket நிறுவனம் Pickrr -யும், ControlZ நிறுவனம் Overcart -யும், Mensa Brands நிறுவனம் Pebble -யும் வாங்கியுள்ளன.  இதன் மதிப்பு வெளியிடப்படவில்லை. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்