Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Indian Unicorn Startups இந்தியா யூனிகார்ன் ஸ்டார்ட்அப்களின் வெற்றிக் கதைகள் ஆரம்பம்...!!

Nandhinipriya Ganeshan June 26, 2022 & 18:15 [IST]
Indian Unicorn Startups இந்தியா யூனிகார்ன் ஸ்டார்ட்அப்களின் வெற்றிக் கதைகள் ஆரம்பம்...!!Representative Image.

நம்முடைய நாடு புதுமையான யோசனைகளை கொண்ட மனிதர்களால் பிசினஸ் உலகில் எந்த உயரத்தை அடைந்துள்ளது என்பதை ஒவ்வொருவரும் நிச்சயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஸ்டார்ட்அப் உலகில் உச்ச வெற்றியாக கருதப்படுவது "யூனிகார்ன்" அந்தஸ்து தான். இந்த அந்தஸ்தை பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. 

அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த யூனிகார்ன் பயணத்தில் இதுவரை 103 யூனிகார்ன்களை பெற்று இந்தியா இவ்வுலகில் தன்னை கம்பீரமாக நிலைநிறுத்தி உள்ளது. தங்கள் கடின உழைப்பு மற்றும் போராட்டத்தால் ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி, கிரீடத்தை அணிந்த இந்தியாவின் யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் கதைகளை ஒரு புதிய தொடராக தொகுத்து வழங்கவுள்ளது சர்ச் அரவுண்ட் வெப். 

"யூனிகார்ன்.."

நாம் இப்போது அதிகம் கேட்கப்படும் ஒரு புதிய வசீகரமான சொல் யூனிகார்ன். 2013 ஆம் ஆண்டு, துணிகர முதலீட்டாளர் (venture capitalist) ஐலீன் லீ, 100 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7,500 கோடிக்கு சமம்) அதிகமான மதிப்பீட்டை பெறும் ஸ்டார்ட்அப்களின் அரிதான தன்மையை குறிக்க, ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் "யூனிகார்ன்" என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். ஒரு காலத்தில் இந்தியாவில் யூனிகார்ன்களின் எண்ணிக்கை குறையாகவே இருந்தது. ஆனால், 2022 ஆம் ஆண்டு இந்தியா 103 யூனிகார்ன்களின் தாயகமாக மாறியுள்ளது. 

இந்தியாவில் யூனிகார்ன் நிலையை எட்டிய 103 வது நிறுவனம் என்ற பெருமையை வசப்படுத்தியிருக்கிறது பெங்களூரை சேர்ந்த SaaS ஸ்டார்ட்அப் நிறுவனமான LeadSquared. தற்போதைய சூழ்நிலையில் யூனிகார்ன் அந்தஸ்தை எட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யோசனைகளுடன் ஒரு புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உதயமாகி கொண்டிருக்கின்றன. இருப்பினும்,  90% ஸ்டார்ட்அப்கள் அவற்றின் ஆரம்ப நிலையிலேயே தோல்வியடைந்து விடுகின்றன. 

ஒவ்வொரு தொழிலதிபரும் தங்கள் ஸ்டார்ட்அப்பை வெற்றியடையச் செய்ய 110% முயற்சி செய்கிறார்கள். ஆயினும்கூட, ஒரு சில நிறுவங்கள் மட்டுமே யூனிகார்ன் கிளப்பில் நுழைய வாய்ப்புக் கிடைக்கிறது. அனைத்து துறைகளிலும் இந்திய ஸ்டார்ட்அப்களுக்கான முன்னோடியில்லாத நிதியுதவிக்கு மத்தியிலும் இந்தியாவில் யூனிகார்ன் மழை பெய்து வருவதுதான் இங்கே உலகத்தை மலைக்கவைத்துள்ள விஷயம். 

"இவர்களை பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? என்று நம் அனைவருக்குமே கேள்வி எழலாம்."

நம் வாழ்வில் வெற்றி வேண்டும் என்றால் மற்றவர்களின் வெற்றிப் பாதையை சற்று திரும்பி பார்த்து தான் ஆக வேண்டும். ஏனென்றால் எல்லோருக்கும் வெற்றி என்பது எளிதில் கிடைக்கக்கூடிய விஷயம் இல்லை. இப்போது இருக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்குப் பின்னாலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும், தோல்விகளும், போராட்டங்களும் புதைந்திருக்கின்றன. இவை அனைத்தும் உங்களை ஒரு உத்வேக பாதையில் கொண்ட செல்லவே இந்த முயற்சி. 

ஒரு தொழில்முனைவோராக, பிசினஸில் ஆர்வம் உள்ளவராக, ஸ்டார்ட்அப் தொடங்க ஆவலாக இருக்கும் மாணவராக, தனது சொந்த முயற்சியால் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல விரும்புவராக நீங்க இருந்தால், இந்த "யூனிகார்ன் பயணப் பாதை" உங்களுக்கு நிச்சியம் உதவியாக இருக்கலாம். 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒவ்வொரு யூனிகார்ன்களின் வெற்றி, தோல்வி, போராட்டம், அவமானம் என அனைத்தையும் விரிவாக தொகுத்து வழங்கப்படவுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web ன்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்