Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அனில் ஃபுட்ஸ் & பிற ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து விதை நிதியை பெற்ற HR டெக் ஸ்டார்ட்அப்…

Nandhinipriya Ganeshan August 04, 2022 & 15:45 [IST]
அனில் ஃபுட்ஸ் & பிற ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து விதை நிதியை பெற்ற HR டெக் ஸ்டார்ட்அப்…Representative Image.

HR டெக் ஸ்டார்ட்அப், ‘இன்டர்வியூடெஸ்க்’ InterviewDesk (ID) அனில் ஃபுட்ஸ் நிர்வாக இயக்குனர் சுகுமார் நடராஜன் அவர்களிடம் இருந்து விதை நிதி சுற்றில் ஒரு குறிப்பிட்ட (Undisclosed) நிதியை திரட்டியுள்ளது. மேலும், இந்த சுற்றில் மார்க்யூ முதலீட்டாளர்களான லட்சுமிநாராயணன் வெங்கடாஜலம் (முன்னாள் அமேசான் நிர்வாகி), கார்த்திக் சந்திரன் (முன்னாள் Amazon Recruiting தலைவர்) உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர். தொழில்நுட்பம் மற்றும் நேர்காணலின் மூலம் நிறுவனங்களுக்கு திறமையானவர்களை விரைவாக வேலைக்கு அமர்த்த உதவுவதே இன்டர்வியூ -இன் பணி.

இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக குளோஸியர், காயின் ஸ்விட்ச் குபெர் & ஜுபிலிகண்ட் ஃபுட் வொர்கர்ஸ், அல்லே, பைஜூஸ், ருபீக், ஜூபிடர் மணி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் விளங்குகின்றனர். வர்த்தகத் துறையில் வேலைக்கு ஆள் எடுப்பதில் உள்ள குறைகளை தீர்க்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டதே இன்டர்வியூடெஸ்க் என்று நிறுவனர் ‘பிச்சுமணி துரைராஜ்’ (அமேசான் முன்னாள் அதிகாரி) தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்