Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Funding Roundup: வாராந்திர நிதி குவிப்பு விபரங்கள் [ஆகஸ்ட் 22 - 27]..

Nandhinipriya Ganeshan August 29, 2022 & 12:20 [IST]
Weekly Funding Roundup: வாராந்திர நிதி குவிப்பு விபரங்கள் [ஆகஸ்ட் 22 - 27]..Representative Image.

Weekly Funding Roundup: இந்த வாரத்தில் 24 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டி இருக்கின்றன. அதில் 3 நிறுவனங்கள் மட்டும் தங்களது விபரங்களை வெளியிடவில்லை. ஆகமொத்தம், இந்த வாரத்தில் 21 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெற்ற மொத்த தொகையின் மதிப்பு சுமார் $142.2 மில்லியன் ஆகும். அதுவே, சென்ற வாரத்தில் 26 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் $147.4 மில்லியனை பெற்றிருந்தன. வாராந்திர நிதியின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த வாரத்தின் மதிப்பு சென்ற வார்த்தை விடவும் சற்று குறைவாகவே உள்ளது.

இந்த வாரத்தின் முக்கிய நிதி சுற்றுகள்: 

Servify – மும்பையை தளமாகக் கொண்ட சாதன மேலாண்மை நிறுவனம் (Device management company) ஆகும். இது Singularity Growth Opportunity Fund தலைமையிலான சீரிஸ் D நிதியுதவி சுற்றில் 65 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. மேலும் இந்த நிதிச் சுற்றில் அயர்ன் பில்லர், பீனெக்ஸ்ட், ப்ளூம் வென்ச்சர்ஸ் மற்றும் டிஎம்ஐ ஸ்பார்க்கிள் ஃபண்ட் போன்ற தற்போதுள்ள முதலீட்டாளர்களும் பங்கேற்றனர். 

ஹெக்டர் பீவரேஜஸ் - ஹரியானாவின் குருகிராமில் உள்ள நிறுவனம், லேத் இன்வெஸ்ட்மென்ட் Pte தலைமையிலான சீரிஸ் D நிதி சுற்றில் 50 மில்லியன் டாலர்களை திரட்டியது. 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹெக்டர் பீவரேஜஸ்இதுவரை பல்வேறு நிதி ஒப்பந்தங்களில் 100 மில்லியன் டாலர்களை திரட்டியிருக்கிறது. 

ஒயாசிஸ் ஃபெர்ட்டிலிட்டி - தெலுங்கானாவின் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஒயாசிஸ் ஃபெர்ட்டிலிட்டி, மும்பையை சேர்ந்த தனியார் நிதி சேவை நிறுவனமான கெடாரா கேபிட்டல் பங்கேற்ற நிதிச் சுற்றில் 50 மில்லியன் டாலர்களை திரட்டியது. 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒயாசிஸ் ஃபெர்ட்டிலிட்டி நிறுவனம் பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் சென்னை உட்பட நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் கிளினிக்குகளைக் கொண்டுள்ளது.

மோஜோகேர் - பெங்களூருவை சேர்ந்த ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப், இது உலகளாவிய முதலீட்டு நிறுவனமான பி கேபிட்டல் தலைமையிலான சீரிஸ் ஏ நிதிச் சுற்றில் 20.6 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. மேலும் இந்த நிதிச் சுற்றில் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களான சிராடே வென்ச்சர்ஸ், செக்வோயா இந்தியாஸ் சர்ஜ் மற்றும் பெட்டர் கேபிடல் ஆகியோரும் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல், டைம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான வினீத் ஜெயின், க்ரெட்டின் நிறுவனரான குணால் ஷா மற்றும் க்யூர்ஃபுட்ஸின் நிறுவனரான அங்கித் நகோரி ஆகியோரும் இந்த நிதியுதவி சுற்றில் கலந்துகொண்டனர்.

Awign - பெங்களூரைச் சேர்ந்த HR Tech ஸ்டார்ட்அப், Bertelsmann India Investments மற்றும் Amicus Capital Partners தலைமையிலான சீரிஸ் B நிதிச் சுற்றில் 15 மில்லியன் டாலர்களை திரட்டியது. நிதியுதவிச் சுற்றில் தற்போதைய முதலீட்டாளர்களான மைக்கேல் & சூசன் டெல் அறக்கட்டளை மற்றும் யூனிடஸ் வென்ச்சர்ஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

வெளியிடப்படாத டீல்கள்:

Webnyay, Cricinshots மற்றும் Ultraviolette ஆகிய நிறுவனங்கள் தங்களது நிதி விவரங்களை வெளியிடவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்