Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PhysicsWallah Acquisition: எட்டெக் யூனிகார்ன் பிசிக்ஸ் வாலா வாங்கிய முதல் நிறுவனம்...!!

Nandhinipriya Ganeshan August 22, 2022 & 16:30 [IST]
PhysicsWallah Acquisition: எட்டெக் யூனிகார்ன் பிசிக்ஸ் வாலா வாங்கிய முதல் நிறுவனம்...!!Representative Image.

PhysicsWallah Acquisition: எட்டெக் ஸ்டார்ட்அப்கள் நிதி திரட்டுவதில் போராடி வரும் இந்த நேரத்தில், கடந்த ஜூன் மாதம் நொய்டாவை சேர்ந்த எட்டெக் நிறுவனமான பிசிக்ஸ் வாலா 'PhysicsWallah', வெஸ்ட்பிரிட்ஜ் மற்றும் ஜிஎஸ்வி வென்ச்சர்ஸ் போன்ற மார்க்யூ முதலீட்டாளர்களிடம் இருந்து சீரிஸ் ஏ நிதிச் சுற்றில் 100 மில்லியன் டாலர்களை திரட்டி இந்தியாவின் 101 வது யூனிகார்னாக உருவெடுத்தது நம் அனைவருக்கும் தெரியும்.

Also Read: யார் இந்த அலக் பாண்டே?

2014 ஆம் ஆண்டு அலக் பாண்டே என்பவரால் யூடியூப் சேனலாக தொடங்கப்பட்டு தற்போது மிகவும் ஃபேமஸான எட்டெக் ஸ்டார்ட்அப்களில் ஒன்றாக விளங்குவது பிசிக்ஸ் வாலா. இது கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரை சேர்ந்த மற்றொரு எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஃப்ரீகோவை 'Freeco', ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கியுள்ளது. 

Also Read: பிசிக்ஸ் வாலா இந்தியாவின் 101 வது யூனிகார்ன் ஆனது எப்படி?

யூனிகார்ன் நிறுவனமாக மாறிய பிறகு பிசிக்ஸ் வாலாவின் முதல் கையப்படுத்தல் இதுவாகும். ஃப்ரீகோ குழுவின் அனுபவத்தை பயன்படுத்தி, பிசிக்ஸ் வாலா தற்போதைய சேவைகளை வலுப்படுத்தவும், மாணவர்களுக்கான கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் நிறுவனர் அலக் பாண்டே தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்