Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Startup Layoffs 2022: இந்த ஆறு மாசத்துல மட்டும் இத்தன லட்சம் பேரு வேலையை இழந்துருக்காங்க.... இது தான் காரணமா...?? 

Nandhinipriya Ganeshan June 11, 2022 & 15:00 [IST]
Startup Layoffs 2022: இந்த ஆறு மாசத்துல மட்டும் இத்தன லட்சம் பேரு வேலையை இழந்துருக்காங்க.... இது தான் காரணமா...?? Representative Image.

Startup Layoffs 2022: ஒரு நிறுவனத்தில் மிக முக்கியான காரணிகளில் ஒன்று என்று சொன்னால் ஊழியர்கள் தான். அவர்கள் இல்லாமல், எவ்வளவு சின்ன பிசினஸாக இருந்தாலும், ஒரு நிறுவனம் நடத்துவதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஊழியர்கள் தான் ஒவ்வொரு நிறுவனத்தின் முக்கிய சொத்துக்கள். இருந்தாலும், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பல பெரிய மற்றும் பிரபலமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த திடீர் பணிநீக்கங்களால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே நேரத்தில் வெளியே செய்வதால், வணிக உலகை திகைக்கடிக்க வைத்துள்ளது. 

ஆட்குறைப்புக்கான காரணம், செலவுக் குறைப்பு முதல் மோசமான செயல்திறன், நிதிச் சிக்கல்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த கொரோனா ஏற்கனவே பல மோசமான சேதத்தை நம்மிடையே ஏற்படுத்திவிட்டது. இப்போது, இம்மாதிரியான பணிநீக்கங்களால் மக்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இந்த மாதிரியான சம்பவங்கள் உலகில் ஒரு பெரிய குழப்பதை உருவாக்கியுள்ளன.

மேலும், இந்த பணிநீக்கங்களுக்கு உலகின் பொருளாதார நிலையும் ஒரு பெரிய காரணம். அறிக்கைகளின்படி, 2022 (layoffs in india 2022) ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 8000 பேர் தங்கள் நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இப்போது, தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்த அந்த நிறுவனங்களை பற்றி ஒரு பார்வை. அதோடு, வருங்காலத்தில் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ள நிறுவனங்கள் பற்றியும் பார்க்கலாம். 

லிடோ லேர்னிங் | Lido Learning

  • நிறுவனர் - சாஹில் ஷெத்
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2019
  • பணி நீக்கம் - 200 ஊழியர்கள்

நெட்ஃபிக்ஸ் | Netflix

  • நிறுவனர் - மார்க் ராண்டோல்ப், ரீட் ஹேஸ்டிங்ஸ்
  • நிறுவப்பட்ட ஆண்டு - 1997
  • பணி நீக்கம் - 150 ஊழியர்கள்

அனாகாடமி | Unacademy

  • நிறுவனர் - கௌரவ் முன்ஜால், ஹேமேஷ் சிங், ரோமன் சைனி, சச்சின் குப்தா
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2015
  • பணி நீக்கம் - 600 ஊழியர்கள்

வேதாந்து | Vedantu

  • நிறுவனர் - ஆனந்த் பிரகாஷ், புல்கித் ஜெயின், சௌரப் சக்சேனா, வம்சி கிருஷ்ணா
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2011
  • பணிநீக்கம் - 624 ஊழியர்கள்

கார்ஸ்24 | Cars24

  • நிறுவனர் - கஜேந்திர ஜாங்கிட், மெஹுல் அகர்வால், ருசித் அகர்வால், விக்ரம் சோப்ரா
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2015
  • பணி நீக்கம் - 600 ஊழியர்கள்

மீஷோ | Meesho

  • நிறுவனர் -  சஞ்சீவ் பார்ன்வால், விதித் ஆத்ரே
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2015
  • பணி நீக்கம் - 150 ஊழியர்கள்

பெட்டர்.காம் | Better.com

  • நிறுவனர் - எரிக் வில்சன், எரிக் பெர்ன்ஹார்ட்சன், ஷான் லோ, விரால் ஷா, விஷால் கார்க்
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2016
  • பணி நீக்கம் - 3000 ஊழியர்கள்

ப்ளிங்கிட் | Blinkit

  • நிறுவனர் - அல்பிந்தர் திந்த்சா
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2013
  • பணிநீக்கம் - 5% பணியாளர்கள்

ஓகே கிரெடிட் | OkCredit

  • நிறுவனர் - கௌரவ் குமார், ஆதித்ய பிரசாத், ஹர்ஷ் போகர்னா.
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2017
  • பணிநீக்கம் - 40 ஊழியர்கள்

ஃபர்லென்கோ | Furlenco

  • நிறுவனர் - அஜித் கரிம்பனா
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2012
  • பணிநீக்கம் - 200 ஊழியர்கள்

ட்ரெல் | Trell

  • நிறுவனர் - அகர்வால், சச்சன், அருண் லோதி, பிமல் கார்த்திக் ரெபா
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2016
  • பணிநீக்கம் - 300 ஊழியர்கள்

ஃபோர்டு | Ford

  • நிறுவனர் - ஹென்றி ஃபோர்டு
  • நிறுவப்பட்ட ஆண்டு - 1903
  • பணிநீக்கம் - 580 ஊழியர்கள்

நூம் | Noom

  • நிறுவனர் - சாஜு ஜியோங், ஆர்டெம் பெட்டகோவ்
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2008
  • பணிநீக்கம் - 500 ஊழியர்கள்

ராபின்ஹூட் | Robinhood

  • நிறுவனர் - விளாடிமிர் டெனேவ், பைஜூ பட்
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2013
  • பணிநீக்கம் - 300 ஊழியர்கள்

நெஸ்ட்லே | Nestle

  • நிறுவனர் - ஹென்றி நெஸ்ட்லே
  • நிறுவப்பட்ட ஆண்டு - 1866
  • பணிநீக்கம் - 104 ஊழியர்கள்

டெஸ்கோ | Tesco

  • நிறுவனர் - ஜாக் கோஹன்
  • நிறுவப்பட்ட ஆண்டு - 1919
  • பணிநீக்கம் - 1600 ஊழியர்கள்

யூனிலீவர் | Unilever

  • நிறுவனர் - அன்டோனியஸ் ஜோஹன்னஸ் ஜூர்கன்ஸ், சாமுவேல் வான் டென் பெர்க், ஜார்ஜ் ஷிச்ட்
  • நிறுவப்பட்ட ஆண்டு - 1929
  • பணிநீக்கம் - 1500 ஊழியர்கள்

எம்ஃபைன் | Mfine

  • நிறுவனர் - பிரசாத் கொம்பல்லி, அசுதோஷ் லாவானியா
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2017
  • பணிநீக்கம் - 500 ஊழியர்கள்

கிளார்னா | Klarna

  • நிறுவனர் - செபாஸ்டியன் சிமியாட்கோவ்ஸ்கி, நிக்லாஸ் அடல்பெர்த்
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2005
  • பணிநீக்கம் - 700 ஊழியர்கள்

சினிப்ளெக்ஸ் | Cineplex

  • நிறுவனர் - எல்லிஸ் ஜேக்கப், கார்த் டிராபின்ஸ்கி, ஜெரால்ட் டபிள்யூ. ஸ்வார்ட்ஸ்
  • நிறுவப்பட்ட ஆண்டு - 1999
  • பணிநீக்கம் - 5000 ஊழியர்கள்

ப்ரைமார்க் | Primark

  • நிறுவனர் - ஆர்தர் ரியான்
  • நிறுவப்பட்ட ஆண்டு - 1969
  • பணிநீக்கம் - 400 ஊழியர்கள்

ராயல் மெயில் | Royal Mail

  • நிறுவனர் - ஹென்றி VIII
  • நிறுவப்பட்ட ஆண்டு - 1516
  • பணிநீக்கம் - 700 ஊழியர்கள்

காண்டே நஸ்ட் | Conde Nast

  • நிறுவனர் - காண்டே நாஸ்ட்
  • நிறுவப்பட்ட ஆண்டு - 1909
  • பணிநீக்கம் - 90% பணியாளர்கள்

டிடி | DiDi

  • நிறுவனர் - Cheng Wei, Zhang Bo, Wu Rui
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2012
  • பணிநீக்கம் - 3000 ஊழியர்கள்

ருபீக் | Rupeek

  • நிறுவனர் – சுமித் மணியார்
  • நிறுவப்பட்ட ஆண்டு - 2015
  • பணிநீக்கம் - 200 ஊழியர்கள்

பணிநீக்கங்களுக்கான பொதுவான காரணங்கள்:

பெரிய நிறுவனங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. இதனால், ஸ்டார்ட்அப் முதல் பிரபல நிறுவனங்கள் வரை அனைவரும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், நிறுவனத்திற்கு நிறுவனம் பல காரணங்கள் மாறுபடுகின்றன. 

  • லாக்டவுன் மற்றும் தொற்றுநோய்க்குப் பிறகு நிறுவனங்களால் சூழ்நிலைகளுக்கு மாற்றியமைக்க முடியவில்லை.
  • பணவீக்கம் மீண்டும் உயர்ந்து வருகிறது.
  • நிறுவனங்கள் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
  • வணிக உலகில் நிதி மந்தநிலை.
  • ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு பல நிறுவனங்கள் பிந்தையவற்றுடன் தங்கள் வணிகத்தை நிறுத்த வழிவகுத்தது.
  • ஊழியர்களின் திறமையின்மை.
  • ஒரு நிறுவனத்தின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல்.

இதற்கிடையில், அமேசான் தங்களது நிறுவனத்தில் நிறைய ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதால், அது  உற்பத்தித்திறனை வெகுவாக குறைத்துள்ளதாம். அதேபோல், வால்மார்ட் நிறுவனமும் அமேசான் போன்ற அதே சிக்கலை எதிர்கொள்கிறதாம். இதனால், தற்போது இந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கடுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றாலும். வருங்காலத்தில் அதை செய்யவும் அதிக வாய்ப்புள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்