Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Recent Startup News: எட்டெக் துறையின் நஷ்டம் ஐடி, சாஸ் நிறுவனங்களுக்கு லாபமாக மாறி வருகிறது...!!!

Nandhinipriya Ganeshan June 07, 2022 & 18:30 [IST]
Recent Startup News: எட்டெக் துறையின் நஷ்டம் ஐடி, சாஸ் நிறுவனங்களுக்கு லாபமாக மாறி வருகிறது...!!!Representative Image.

Recent Startup News: 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஊழியர்கள் ஆட்குறைப்பு மற்றும் பணிநிறுத்தங்கள் பற்றிய செய்திகள் தான் அதிகம். காரணம் எல்லாத் துறைகளிலும் ஒரே மாதிரியான மந்த சந்தை வளர்ச்சி மற்றும் நிதி குளிர்காலத்தின் வருகை (funding winter) தான். 

பொருளாதார நெருக்கடி:

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்திய நிறுவனங்களில் தனியார் பங்கு (private equity) மற்றும் துணிகர மூலதன நிறுவனங்களின் (enture capital) முதலீடுகள் 27% குறைந்து 117 ஒப்பந்தங்களில் 5.5 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பெரிய நிதி சுற்றில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக, ஆண்டு அடிப்படையில், மாதாந்திர ஸ்டார்ட்அப் முதலீடுகள் 50 சதவீதம் சரிந்துள்ளது. இதனால், எட்டெக், ஈகாமர்ஸ் மற்றும் நேரடி நுகர்வோர் (D2C) மற்றும் போக்குவரத்து ஒருங்கிணைப்புத் துறைகளில் (transport aggregator) உள்ள ஸ்டார்ட்அப்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. 

பணிநீக்கங்கள்:

பொருளாதாரா நெருக்கடியால், வேதாந்து, அன்காடமி, பைஜூவின் ஆதரவு பெற்ற வைட்ஹாட் ஜூனியர், லிடோ லேர்னிங் உள்ளிட்ட எட்டெக் நிறுவனங்கள், இந்த ஆண்டில் மட்டும் 2255 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கின்றன. இதனால், வேலையை இழந்து நிற்கும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஐடி மற்றும் சாஸ் நிறுவனங்கள்  செயல்பட்டு வருகின்றன. அதாவது, தொழில்நுட்ப துறையில் தேவை அதிகரித்து வருவதால் ஆரம்ப நிலையில் இருக்கும் ஐடி மற்றும் சாஸ் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களை பணியமர்த்தப்பட்டு வருகின்றன.

ஃபோன் பே:

சமீபத்தில், 2022 ஆம் ஆண்டின் காலண்டர் ஆண்டில், 2,800 பேரை பணியமர்த்த திட்டமிட்டிருப்பதாக பேமெண்ட் நிறுவனமான PhonePe இன் இணை நிறுவனர் மற்றும் CTO ராகுல் சாரி அறிவித்திருந்தார். அந்த வகையில், இதுவரை 250 பேரை பணியமர்த்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், அப்கிரேட் நிறுவனமும் ஜூன் - ஆகஸ்ட்டில் 3000 ஊழியர்களை திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து டீஷேர் - 1500, உபெர் - 500, ஸிம்பில் - 250, எமிட்கார்ட் - 100 ஊழியர்களையும் வரும் நிதியாண்டில் பணியமர்த்த உள்ளதாக திட்டமிட்டுள்ளன. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்