Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

PhysicsWallah: இந்தியாவின் 101வது யூனிகார்னாக மாறிய யூடியூப் சேனல்... யூடியூம் சேனல் டூ எட்டெக் யூனிகார்ன்...!!

Nandhinipriya Ganeshan June 07, 2022 & 17:18 [IST]
PhysicsWallah: இந்தியாவின் 101வது யூனிகார்னாக மாறிய யூடியூப் சேனல்... யூடியூம் சேனல் டூ எட்டெக் யூனிகார்ன்...!!Representative Image.

India's 101 Unicorn: எட்டெக் ஸ்டார்ட்அப்கள் நிதி திரட்டுவதில் போராடி வரும் இந்த நேரத்தில், எட்டெக் நிறுவனமான PhysicsWallah, (இது PW என்றும் அழைக்கப்படுகிறது) வெஸ்ட்பிரிட்ஜ் மற்றும் GSV வென்ச்சர்ஸ் ஆகியவற்றிலிருந்து சீரிஸ் A நிதிச் சுற்றில் 100 மில்லியன் டாலர்களை திரட்டி, இந்தியாவின் 101 வது யூனிகார்னாக மாறியுள்ளது. தற்போது PhysicsWallah நிறுவனத்தின் மதிப்பு 1.1 பில்லியன் டாலர் ஆகும். அதுமட்டுமல்லாமல், PhysicsWallah இந்த ஆண்டு இந்த மைல்கல்லை எட்டிய முதல் edtech நிறுவனம் ஆகும்.

101 வது யூனிகார்ன்: 

திரட்டப்பட்ட நிதியை, வணிக விரிவாக்கம், பிராண்டிங், அதிக லெர்னிங் மையங்களைத் திறப்பது மற்றும் பல படிப்புகளை அறிமுகப்படுத்துவது போன்றவற்றிற்காக பயன்படுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பெங்காலி, மராத்தி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஒடியா, மலையாளம் மற்றும் கன்னடம் உட்பட ஒன்பது இந்திய மொழிகளில் கல்வி உள்ளடக்கத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாகவும் பிசிக்ஸ் வாலாவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அலக் பாண்டே தெரிவித்துள்ளார். 

யூடியூம் சேனல் டூ எட்டெக் யூனிகார்ன்:

முதலில் பிசிக்ஸ் வாலா -வை யூடியூப் சேனலாக தான் 2014 ஆம் ஆண்டு அலக் பாண்டே தொடங்கினாராம். பின்னர், மாணவர்களிடையே பெரிய வரவேற்பை கிடைத்ததையடுத்து அனாகாடமி அவரை ஆண்டுக்கு ரூ. 40 கோடி சம்பளத்துடன் ஆசிரியராக நியமிக்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நிராகரித்து, தனது சேனலை மேம்படுத்த விரும்பியுள்ளார்.

பிசிக்ஸ் வாலா:

PhysicsWallah தற்போது 18 நகரங்களில் 20க்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டுள்ளது, 2022-23 கல்வியாண்டில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், கூகுள் ப்ளே ஸ்டோரில் அதன் பயன்பாட்டில் 5.2 மில்லியன் பதிவிறக்கங்களையும், யூடியூப்பில் 6.9 மில்லியன் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது. 
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் NEET மற்றும் JEE போன்ற போட்டித் தேர்வுகளில் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 500 ஆசிரியர்கள், 90-100 தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க 200 இணைப் பேராசிரியர்கள் மற்றும் தேர்வுக் கேள்விகள் மற்றும் டெர்ம் பேப்பர்களை உருவாக்க 200 வல்லுநர்கள் உட்பட 1,900 பேர் பணிபுரிகின்றனர். 

ஒரே லாபகரமான எட்டெக் யுனிகார்ன்:

குறிப்பிடத்தக்க வகையில், PhysicWallah மட்டுமே தற்போது லாபம் ஈட்டும் எட்டெக் யூனிகார்ன் மற்றும் அதன் பயணம் முழுவதும் பூட்ஸ்ட்ராப் செய்யப்பட்டிருக்கிறது. 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்