Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Crejo Fun News: கம்பெனியை இழுத்து மூடிய பிரபல எட்டெக் ஸ்டார்ட்அப்... மோசமாகி வரும் எட்டெக் துறையின் நிலைமை...!!

Nandhinipriya Ganeshan June 30, 2022 & 17:45 [IST]
Crejo Fun News: கம்பெனியை இழுத்து மூடிய பிரபல எட்டெக் ஸ்டார்ட்அப்... மோசமாகி வரும் எட்டெக் துறையின் நிலைமை...!!Representative Image.

Crejo Fun News: மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் -க்கு சொந்தமான Crejo.Fun மற்ற நிறுவனங்களை போல் ஆன்லைனில் கல்வி கற்பிக்கும் நிறுவனமல்ல. இது சற்று வித்தியாசமான முறையில் குழந்தைகளின் ஆர்வங்களை கண்டறிவதற்காக யோகா, பொது பேச்சு, நடனம், செஸ், கலை மற்றும் கைவினை (arts & crafts) வகுப்புகளை ஆன்லைனில் கற்பித்து வந்தது. 

ஒவ்வொரு படிப்புகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு சிறந்த முறையில் வகுப்புகளை நடத்தி வந்தது. ஒவ்வொரு படிப்புகளுக்கு கட்டணம் ரூ. 8000 முதல் ரூ. 26,999 வரை வசூலிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு பன்சால் மற்றும் அகர்வால் என்ற இரண்டு ஐஐஐஎம் பெங்களூர் முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்டது. 

மேலும், 2021 ஆம் ஆண்டு இந்த எட்டெக் ஸ்டார்ட்அப் மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் மற்றும் 021 கேபிட்டல் போன்றவற்றில் இருந்து 3 மில்லியன் டாலர்களை திரட்டியது. இந்த நிதிச்சுற்றில் குனால் ஷா, சமீர் நிகம், அங்கித் நாகோரி, சுஜீத் குமார் போன்ற ஏஞ்சல் முதலீட்டாளர்களும் பங்கேற்றனர். 

இந்த ஸ்டார்ட்அப்பில் ஆன் ரோலில் 170 பேரும் மற்றும் ஆஃப் ரோலில் 200 பேரும் பணியாற்றினர். கொரோனா கட்டுப்பாட்டால் பள்ளி, கல்லூரிகள் மூடியதால் இதில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், கொரோனா கட்டுபாடு நீங்கியாதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கியது.

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக சரியான வருவாய் மற்றும் நிதியும் கிடைக்காததால் இறுதியில் கம்பெனியை மூட முடிவெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், வணிக பொருளாதார வீழ்ச்சியும் கடும் சரிவை கண்டுவருவதால் இந்த முடிவு எடுப்பதற்கான காரணம் என்று நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் பணிபுரிந்த 90% பணியாளர்களுக்கு வேறு வேலை கிடைத்துவிட்டதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மட்டும் எட்டெக் துறையானது 6.1 பில்லியன் டாலர் நிதியுதவியை பெற்றுள்ளன. இருப்பினும் கொரோனா பாதிப்பு குறைவடைந்ததன் தாக்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீண்டு திறக்கப்பட்டதால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் பணிநிறுத்தங்களை சந்தித்து வருகின்றன. இந்த நிறுவனத்தை போன்றே உதய், சூப்பர்லேர்ன், லிடோ ஆகிய நிறுவனங்கள் தங்களது கம்பெனியை மூடிவிட்டன. 

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்