Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Track My Period on WhatsApp in Tamil: பீரியட்ஸ் தேதி மறந்துடிச்சா.. இனிமே வாட்ஸ் ஆப் மூலமே தெரிஞ்சிக்கலாம்.. எப்படி?

Nandhinipriya Ganeshan July 16, 2022 & 18:00 [IST]
How to Track My Period on WhatsApp in Tamil: பீரியட்ஸ் தேதி மறந்துடிச்சா.. இனிமே வாட்ஸ் ஆப் மூலமே தெரிஞ்சிக்கலாம்.. எப்படி?Representative Image.

How to Use Period Tracker on Whatsapp in Tamil: உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் தனிப்பட்ட உரையாடல்களை மேற்கொள்ள பாதுகாப்பான, நம்பகமான தளமாக வாட்ஸ் அப் விளங்குகிறது. இன்று வாட்ஸ் அப் பயன்படுத்த நபர்களே இவ்வுலகில் இல்லை. வாழ்வின் ஒரு அங்கமாகவே மாற்றிவிட்ட இந்த வாட்ஸ் அப்பில் பயனர்களின் விருப்பதற்கு ஏற்ப பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பெண் பயனர்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் கண்காணித்துக் கொள்ள முடியும். அது எப்படி என்று தானே கேட்கிறீர்கள்? வாங்க தெரிந்துக் கொள்ளலாம்.

பெண்களுக்கான சுகாதார பிராண்டான சிரோனா, சமீபத்தில் இந்தியாவின் முதல் முறையாக வாட்ஸ் அப்பில் ‘பீரியட் ட்ராக்கர்’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமே உங்களுடைய பீரியட்ஸ் தேதியை ஈஸியாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இதுக்கு நீங்க செய்யவேண்டியது எல்லாம் ஒரே ஒரு ‘ஹாய்’ மெசேஜ் மட்டும்தான். அதாவது, சிரோனா நிறுவனத்தின் 9718866644 என்ற வாட்ஸ் அப் பிசினஸ் அக்கவுண்டிற்கு அனுப்பினால் போதும் பயனர்கள் தங்கள் மாதவிடாய் நாட்களை எளிதாக கண்காணித்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மாதமும் இந்த சுழற்சியை கண்காணித்துக்கொள்ள இந்த வசதி உங்களுக்கு உதவும்.  இந்த ட்ராக்கர் மூலம் மாதவிடாய் தேதியை ட்ராக் செய்யலாம், கருவுற்றிருப்பதை கண்காணித்துக் கொள்ளலாம், கருவுறுவதை தவிர்க்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் தான் இந்த நிறுவனம் பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பாக முழுமையான தீர்வளிக்கும் வகையில் ‘சிரோனா ஆப்’ ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற தயக்கமில்லாமல் பயனர்கள் வெளிப்படையாகத் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள இந்த ஆப் உண்மையில் உதவியாக இருக்கும்.

வாட்ஸ் அப்பில் உங்களுடைய பீரியட்ஸ் தேதியை எப்படி கண்காணிக்கலாம்?

முதலில் உங்களுடைய காண்டாக்ட்டில் 9718866644 என்ற நம்பரை சேமிக்க வேண்டும்.

பின்னர், அந்த நம்பருக்கு ‘ஹாய்’ என்று ஒரு மெசேஜை தட்டி விடுங்கள்.

இப்போது, சிரோனா விருப்பங்களின் பட்டியலை வழங்கும்.

அதில் உங்களுடைய பீரியட்ஸ் தேதியை கண்காணிக்க, chat box ல் “பீரியட் டிராக்கர்” என்று உள்ளிடவும்.

அதன்பிறகு கால விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படும்.

அவ்வளவு தான் உங்களுடைய அடுத்த மற்றும் கடைசி மாதவிடாய் காலம், உங்கள் மாதவிடாய் சுழற்சியின் காலம் போன்றவற்றை காண்பிக்கும்.

Tags:

Period Tracker in Whatsapp, Period tracker app, How to use period tracker, How to track my period on whatsapp in tamil, How to use period tracker on whatsapp in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்