Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

MBA Chai Wala Prafull Billore Success Story in Tamil: கலைந்த எம்பிஏ கனவு.. ஆனா டீ கடையில் மாசம் 17 லட்சம் வருமானம்… கலக்கும் விவசாயி மகன்..!!

Nandhinipriya Ganeshan July 18, 2022 & 15:00 [IST]
MBA Chai Wala Prafull Billore Success Story in Tamil: கலைந்த எம்பிஏ கனவு.. ஆனா டீ கடையில் மாசம் 17 லட்சம் வருமானம்… கலக்கும் விவசாயி மகன்..!!Representative Image.

MBA Chai Wala Prafull Billore Success Story in Tamil: அகமதாபாத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகன் பிரஃபுல் பில்லோர். எல்லா இளைஞர்களுக்கும் இருப்பதுபோன்று இவருக்கும் எம்பிஏ படிக்க வேண்டும் என்று நீண்ட நாள் கனவு. அதற்காக தொடர்ந்து மூன்று முறை CAT தேர்வு எழுதியிருக்கிறார். ஆனால் மூன்று முறையும் தோல்வி. இதனால் எம்பிஏ கனவை கைவிட, அவருடைய தந்தையின் விருப்பத்திற்காக உள்ளூர் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். ஆனால், அவரால் படிப்பை தொடர முடியாமல் பன்னிரெண்டே நாட்களில் காலேஜை விட்டு வெளியேறினார்.

இதனால் மிகவும் வருத்தமடைந்த தனது தந்தையிடம், என்னால் காலேஜ் தான் போக முடியவில்லை. ஆனால், சொந்த தொழில் செய்து முன்னேருவேன் என்று வாக்கு கொடுக்கிறார். அதன்படி, தாம் எந்த கல்லூரியில் (ஐஐஎம் அகமதாபாத்) படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதே கல்லூரி முன்பு 2017 ஆம் ஆண்டு ‘எம்பிஏ சாய் வாலா’ என்ற பெயரில் டீ ஸ்டால் ஒன்றை ஆரம்பிக்கிறார்.

பிரஃபுல் பில்லோர் நம்பிக்கையுடன் ஆரம்பித்த டீக்கடை கொஞ்ச நாட்களிலேயே எதிர்பாராத வருமானத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. அதன்பின், அவருடைய சகோதரர் விவேக் பில்லோரும் 2020 ஆம் ஆண்டு எம்பிஏ சாய் வாலாவின் இணை நிறுவனராக இணைகிறார். இப்படி நாட்கள் கடக்க, 2021 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீநகர், போபால், டெல்லி, சூரத் போன்ற 100 நகரங்களுக்கு அவர்களுடைய நிறுவனத்தை விரிவாக்கம் செய்தனர். மேலும், தங்களது இலக்குகளை அடைவதற்காக ஒவ்வொரு மாதமும் 10லிருந்து 15 புதிய கடைகளை இந்நிறுவனம் திறந்து வருகிறது.

புதியதாக திறக்கப்படும் ஒவ்வொரு கடைகளும் எம்பிஏ சாய் வாலா என்ற பிராண்ட் பெயரில் இயக்கப்படுகின்றன. எம்பிஏ சாய் வாலா என்ற பெயரில் துவங்கப்படும் ஒவ்வொரு கடையின் உரிமையாளரும் வருடம் 20 லட்சம் ரூபாய் பிரஃபுல் பில்லோருக்கு கொடுக்க வேண்டும். இதில் வரும் வருமானம் மட்டுமல்லாமல், அகமதாபாத்தில் செயல்பட்டுவரும் பிரஃபுல் பில்லோரின் அசல் எம்பிஏ சாய் வாலா டீ கடை மாதத்திற்கு ரூ. 17 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறது.

இவர்களின் இலக்கே 4000 நகரங்களில் தனது வணிகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதே. அந்த வகையில், இதுவரை வட இந்தியாவில் மட்டும் தனது விரிவாக்கத்தை கொடுத்த எம்பிஏ சாய் வாலா, தற்போது நாட்டின் தெற்கு பகுதியிலும் தனது நிறுவனத்தை விரிவாக்க திட்டுமிட்டுள்ளதாக பிரஃபுல் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பெருநகரங்களான கோவா, திருப்பதி, சென்னை, பெங்களூரு, பெல்காம் போன்ற சில இடங்களில் கடைகளை ஆரம்பிக்க இருக்கிறாராம். அந்த வகையில், வரும் ஜுலை 20 ஆம் தேதி சென்னை நந்தனம் பகுதியில் தனது முதல் கடையை திறந்து வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சொந்தமாக தேயிலை பிராண்டையும் தொடங்க உள்ளதாகவும், பிரஃபுல் பில்லோர் திட்டுமிட்டுள்ளாராம். படித்து தான் கோடீஸ்வரர் ஆக முடியுமா? தன்நம்பிக்கையும் மனவுறுதியும் இருந்தால் எதிலும் ஜெயித்து காட்ட முடியும் என்பதை நிரூப்பித்துள்ளார் இந்த இளைஞர். சொந்த தொழிலின் மூலம் முன்னேற வேண்டும் என்று நினைத்துவிட்டால், எந்த தொழிலும் இழிவு கிடையாது. தனது எம்பிஏ கனவு கலைந்தாலும், நான் சாதித்து காட்டுவேன் என்று விடாமுயற்சியுடன் முயன்று தற்போது கோடீஸ்வரர் ஆன பிரஃபுல் பில்லோரின் வாழ்க்கை உண்மையில் பாராட்டத்தக்கது. உங்களுக்கு தெரியுமா? எம்பிஏ சாய் வாலா நிறுவனத்தின் வருடாந்திர வருமானம் 4-5 கோடியாம். கேட்கவே மெய்சிலிர்க்க வைக்கிறது. அல்லவா! 

Tags:

MBA Chai Wala Prafull Billore Success Story in Tamil | Prafull billore success story | Mba chai wala net worth | Mba chai wala net worth per month | Mba chai wala owner | Mba chai wala success story


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்