Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஸ்டார்ட் அப்களை தொடர்ந்து பணிநீக்கம் லிஸ்ட்டில் சேர்ந்த கார்ப்ரேட் நிறுவனங்கள்…

Nandhinipriya Ganeshan July 14, 2022 & 12:45 [IST]
ஸ்டார்ட் அப்களை தொடர்ந்து பணிநீக்கம் லிஸ்ட்டில் சேர்ந்த கார்ப்ரேட் நிறுவனங்கள்…Representative Image.

உலகம் முழுவதும் பணவீக்கம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இதனால் சிறிய நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை சமீபத்தில் பல்வேறு நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களை வெளியேற்றி வருகின்றன.

அந்த வகையில், அமெரிக்காவில் பண பலம் கொண்ட டெஸ்லா, ட்விட்டர், பேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களும் இந்த வரிசையில் இணைந்துள்ளன.

உலகின் மிகவும் பிரபலமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 1,800 பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது.

இதற்கிடையில், கூகுள் நிறுவனமும் 2022 ஆம் ஆண்டு புதிய பணியமர்த்தும் செயலை குறைக்கப்போவதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

Tags:

Microsoft layoffs 2022 | Startup layoffs 2022 | Google announcement 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்