Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

India’s 104th Unicorn: இந்தியாவின் 104வது யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற பிரபல ஃபின்டெக் ஸ்டார்ட்அப்…!!

Nandhinipriya Ganeshan July 14, 2022 & 12:00 [IST]
India’s 104th Unicorn: இந்தியாவின் 104வது யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற பிரபல ஃபின்டெக் ஸ்டார்ட்அப்…!!Representative Image.

India’s 104th Unicorn: பூனேவை சேர்ந்த ஃபின்கெட் ஸ்டார்ட்அப் ஒன்கார்டு இந்தியாவின் 104 வது யூனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அதாவது, கடந்த ஜூலை 10 ஆம் தேதி சிங்கப்பூரைத் தளமாக கொண்ட டெமாசெக் தலைமையிலான சீரிஸ் டி சுற்றில் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியிருந்தது. இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு 1.4 பில்லியனுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.

எந்தவொரு நிறுவனம் 100 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 7,500 கோடிக்கு சமம்) அதிகமான மதிப்பீட்டை கொண்டிருக்கிறதோ, அந்நிறுவனம் யூனிகார்ன் என்ற அந்தஸ்தை பெறும் என்று நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம். அந்த வகையில், அனுராக் சின்ஹா, ரூபேஷ் குமார் மற்றும் வைபவ் ஹாதி ஆகியோரால் 2018 இல் நிறுவப்பட்ட OneCard ஸ்டார்ட்அப்பின் மதிப்பு 1.4 பில்லியனை கொண்டு இந்தியாவின் 104வது யூனிகார்ன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த நிறுவனம் IDFC வங்கி, சவுத் இந்தியன் வங்கி, பெடரல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா பைனான்சியல் போன்ற வங்கிகளுடன் இணைந்து விசா கிரெடிட் கார்டுகளை (onecard metal credit card) வழங்கி வருகிறது. கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் இதுவரை 2.5 லட்சம் கார்டுகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Tags:

India’s 104th Unicorn | Onecard Unicorn | Onecard funding | Fintech unicorn


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்