Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Shaadi.com ல் பெண் வீட்டார் அதிகமா தேடின வார்த்த என்னானு தெரியுமா? ஐஏஎஸ், ஐபிஎஸ் -லாம் இல்லையாம்..!!

Nandhinipriya Ganeshan July 07, 2022 & 18:00 [IST]
Shaadi.com ல் பெண் வீட்டார் அதிகமா தேடின வார்த்த என்னானு தெரியுமா? ஐஏஎஸ், ஐபிஎஸ் -லாம் இல்லையாம்..!!Representative Image.

நம் நாட்டில் வரன் தேடுவதற்காகவே பல இணையதளங்கள் குவிந்து கிடக்கின்றன. அதில் பிரபலமான ஒரு தளம் தான் Shaadi.com Matrimony. இங்கு மாப்பிள்ளை தேடும் பெண் வீட்டார் அதிகம் தேடிய வார்த்தை என்னவென்று தெரியுமா? இந்த வார்த்தை குறித்து டிஜிட்டல் இந்தியா வார நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளது அனைவரிடத்திலும், குறிப்பாக 90’ஸ் கிட்ஸ் மாப்பிள்ளைகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டில் பலரும் வரன் கிடைக்காமல், இம்மாதிரியான ஆன்லைன் தளங்களில் தங்களது விவரங்களை பதிவு செய்வது வழக்கம். அப்படி நம்ம 90’ஸ் கிட்ஸ் மாப்பிள்ளைகள் பலரும் இப்படி பதிவு செய்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில், ஈஸியாக பெண் கிடைக்கும் ட்ரிக்கை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

அதாவது, திருமண தளங்களில் உயர் கல்வி நிறுவனத்தில் பட்டதாரியாகவோ அல்லது அரசு ஊழியராகவோ இருப்பது தான் கெத்து என நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இனிமே அப்படி இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அப்படி மாறியிருக்கிறது நிலைமை. நீங்க நினைக்கலாம் அந்த வார்த்தை ஒருவேளை ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரியாக இருக்குமோ என்று. ஆனால் அதுதான் கிடையாது. தளத்தில் அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தை என்னவென்றால், ஸ்டார்ட் அப் நிறுவனர் (Startup founder) மற்றும் ஸ்டார்ட் அப் ஊழியர் (Startup employee). இந்த இரண்டு வார்த்தை தான் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண மக்களும் இனி ஸ்டார்ட் அப் தான் எதிர்காலம் என்று புரிந்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். ஆனால், 90’ஸ் கிட்ஸ்களின் நிலைமையை நினைத்தால் தான் சற்று வேதனையாக அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.  

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்