Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒரு நற்செய்தி!

Nandhinipriya Ganeshan September 08, 2022 & 14:30 [IST]
ஈரோடு மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒரு நற்செய்தி!Representative Image.

StartupTN Brand Labs: தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (Tamil Nadu Startup and Innovation Mission - TANSIM) ஸ்டார்ட்அப்டிஎன் பிராண்ட் லேப்ஸ் (StartupTN Brand Labs) மற்றும் ஸ்டார்ட்அப்டிஎன் லாஞ்ச்பேட் (StartupTN Launchpad) என்ற இரு புதிய முன்முயற்சிகளுடன் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அவர்களின் ஆரம்ப நாட்களில் அதிக செலவு செய்யாமல் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம். 

அந்தவகையில், StartupTN BrandLabs ஃபோரம் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில், ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், நீலகிரி, நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களுடைய பிராண்ட் அல்லது தயாரிப்புகளை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த விரும்பினால், இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

தற்போது இதற்கான அப்ளிகேஷன் இப்போது திறக்கப்பட்டுள்ளது, அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிராண்ட் லேப்ஸ் ஃபோரத்தில் உறுப்பினராவதற்கும், நிகழ்வில் பங்கேற்கவும் விரும்பினால் இங்கே பதிவு செய்யவும்: Apply Now

மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஸ்டார்ட்அப்கள் தங்கள் தயாரிப்பு அல்லது பிராண்டை அறிமுகப்படுத்த இங்கே விண்ணப்பிக்கவும்: Apply Now

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.09.2022 

உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளைத் அறிமுகப்படுத்தவதன் மூலமாக உங்களுடைய நிறுவனத்தின் தரத்தையும், மதிப்பையும் உலகளவில் பரப்பி நன்மை அடைய இந்த சிறந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்