Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

MS Dhoni Latest News: நம்ம தல மகேந்திர சிங் தோனியின் அடுத்த டார்கெட் விவசாயம்.. தீவிர ரசிகரின் கனவு நனவானது..!!

Nandhinipriya Ganeshan June 06, 2022 & 18:10 [IST]
MS Dhoni Latest News: நம்ம தல மகேந்திர சிங் தோனியின் அடுத்த டார்கெட் விவசாயம்.. தீவிர ரசிகரின் கனவு நனவானது..!!Representative Image.

MS Dhoni Latest News: இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சென்னையை தளமாகக் கொண்ட ட்ரோன் ஸ்டார்ட்அப்பான கருடா ஏரோஸ்பேஸ் (Drone Startup) நிறுவனத்தின் பங்குதாரராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்காக இவர் ஒரு தொகையை முதலீடு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிறுவனம் சமீபத்தில் நாட்டின் விவசாயத்தை ஆதரிக்கும் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. அதாவது, கிராம அளவிலான தொழில்முனைவோர்கள் அல்லது பூச்சிக்கொல்லி மற்றும் உர விற்பனையாளர்களுக்கு ட்ரோன்களை விற்பனை செய்வது.

எம்.எஸ்.தோனி

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு விவசாயத்திலும் அதிக ஈடுபாடு உள்ளதாம். அதுமட்டுமல்லாமல், அவருக்கு ராஞ்சியில் ஒரு பண்ணை வீடும் இருக்கிறதாம். அங்கு ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறார்களாம். மேலும், ஓய்வுக்குப் பிறகு தோனி ஆடை, மதுபானம், விவசாயம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், இந்த செய்தி குறித்து பேசிய தோனி, கருடா ஏரோஸ்பேஸின் ஒரு பகுதியாக மாறுவதில் மிகவும் மகிழ்ச்சியடையவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், "(நான்) அவர்கள் வழங்கும் தனித்துவமான ட்ரோன் தீர்வுகளுடன் அவர்களின் வளர்ச்சிக் கதையைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று அவர் கூறியதாக கருடா நிறுவனம் ஒரு செய்தி குறிப்பில் மேற்கோள் காட்டியுள்ளது.

தீவிர ரசிகரின் கனவு நனவானது

கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சிஇஓ அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் (Founder and CEO of Garuda Aerospace) தோனியின் தீவிர ரசிகராம். அந்த வகையில், கருடா ஏரோஸ்பேஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக அவரைக் கொண்டு வர வேண்டும் என்று ஆசையாக இருந்தாராம். இப்போது, அவருடைய கனவு நினைவாகியுள்ளது. இதனால், மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றாராம். இது குறித்து பேசிய அவர், "தோனி எங்களுடன் இருப்பது மிகப்பெரிய மதிப்பை சேர்க்கும், அதுமட்டுமல்லாமல் எங்கள் அணியை சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும்" என்று உறுதியாக நம்புவதாக தெரிவித்தார்.

கருடா ஏரோஸ்பேஸ்

இந்தியாவில் செயல்பட்டு வரும் நான்கு ட்ரோன் ஸ்டார்ட்அப்களில் ஒன்று தான் கருடா ஏரோஸ்பேஸ் (drone-as-a-software). இது தற்போது இந்தியாவின் முதல் ட்ரோன் யூனிகார்ன் ஸ்டார்ட்அப்பாகவும் (India's first drone startup) உருவெடுத்துள்ளது. 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், 26 நகரங்களில் 300 ஆளில்லா விமானங்களையும், 500 விமானிகளையும் பயன்படுத்தி வருகின்றது. கடந்த ஆண்டு, இந்த எலோன் மஸ்க் இந்நிறுவனத்தை அங்கீகரித்தார். இதனால், பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 33 ட்ரோன் ஆர்டர்களை பெற்று இந்திய ஸ்டார்ட்அப் பாதுகாப்புத் துறையிலும் நுளைந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்