Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

700 பேர் திடீர் பணிநீக்கம்.. 3 அதிகாரிகள் இராஜினாமா.. என்னதான் நடக்குது?

Nandhinipriya Ganeshan July 09, 2022 & 16:30 [IST]
700 பேர் திடீர் பணிநீக்கம்.. 3 அதிகாரிகள் இராஜினாமா.. என்னதான் நடக்குது?Representative Image.

Ola Layoffs 2022: இந்தியாவின் பிரபல ஆன்லைன் டாக்ஸி சேவை மற்றும் முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா கடந்த சில வாரங்களாக பல முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், நிறுவனத்தின் தற்போதைய முடிவு ஊழியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சர்வதேச சந்தையில் இருந்து புதிய முதலீடுகள் பெற முடியாத சூழ்நிலையால், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்து மூட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன.

அந்த நிலையில் தான் தற்போது ஓலா நிறுவனமும் இருக்கிறது. இதனால், செலவுகளை சமாளிக்க முடியாத ஓலா இந்த வருடத்திற்கான சம்பள உயர்வை அளிக்கப்போவது இல்லை என்று ஊழியர்களிடம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. அதற்கான பிங்க் சிலிப் (Pink Slips) அதாவது பணிநீக்க ஆணையையும் கொடுத்துள்ளது.

தற்போது ஓலா நிறுவனம் அனைத்து வர்த்தக பிரிவுகளில் இருந்தும் பல அடுக்குகளில் இருந்தும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது. அந்த வகையில், இந்த பணிநீக்க நடவடிக்கையில் 700 ஊழியர்கள் தங்களது வேலையை இழக்கலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த இரண்டு வாரத்தில் மட்டும் 3 உயர் அதிகாரிகள் ஓலா நிறுவனத்தை விட்டு வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்